சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள் ‘ என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அதிலிருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கோலிவுட்டில் தனக்கான முதல் இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 160 படங்களுக்கு மேலாக நடித்து விட்டார். இன்றைய இளம் இயக்குனரான நெல்சன் உடன் பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்.
ஒரு விழா மேடையில் ரஜினியின் குருவான பாலசந்தருக்கும் ரஜினிக்கும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்தது. அப்போது பாலச்சந்தர் அவர்கள் ரஜினியிடம் அவருக்கு பிடித்த இயக்குனர் மற்றும் படங்களை பற்றி கேட்டு இருக்கிறார். அப்போது சூப்பர் ஸ்டார் அவருடைய குருவிடமே தனக்கு பிடித்த இயக்குனர் என்று வேறொரு பெயரை கூறியிருக்கிறார்.
ரஜினி அவருக்கு பிடித்த இயக்குனர் என்று கூறியது டைரக்டர் மகேந்திரன். எதார்த்தமான கதைக்களம், இயற்கையான காட்சிகளத்திற்கு பேர் போனவர் தான் இயக்குனர் மகேந்திரன். தமிழில் 26 பாடங்களுக்கு மேல் கதை, திரைக்கதை எழுதியவர் 1978 ஆம் ஆண்டு இயக்குனராக தனது கலைப்பணியை தொடங்கினார்.
முதன் முதலில் அவர் இயக்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியை தான். அவர் ரஜினியை வைத்து இயக்கிய முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை மூன்று படங்களுமே ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படங்கள்.
மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய படம் முள்ளும் மலரும் . இதில் ரஜினிகாந்த், சரத் பாபு, சோபா, படாபட் ஜெயலட்சுமி நடித்திருந்தனர். முள்ளும் மலரும் , கல்கி இதழில் வெளியான ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படம் ரஜினியை ஒரு புதிய பரிமாணத்தில் காட்டியது. சிறந்த படத்திற்கான பிலிம் பேர் விருதை வாங்கியது.
1980ல் மகேந்திரன் இயக்கிய படம் ஜானி. இதில் ரஜினிக்கு இரட்டை வேடம். இதில் ஸ்ரீதேவி மற்றும் தீபாவும் நடித்திருந்தனர். ஜானி மற்றும் வித்யாசாகர் என்று இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார் ரஜினி. இளையராஜா இசையில் இந்த படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட் .
நடிகர் விஜயகுமார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இந்த படத்தை மகேந்திரன் இயக்க வேண்டும் என ரஜினி விரும்பினார். கன்னடத்தில் வெளியான ஒரு தொகுப்பு படத்தை நீடித்து எழுதப்பட்ட கதை கை கொடுக்கும் கை. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். ரஜினியின் ஜோடியான ரேவதியை ஒருவன் கற்பழிப்பது போல் கதை இருக்கும். இதை ரஜினி ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று தயாரிப்பாளர் விஜயகுமார் கூறியும் மகேந்திரன் கிளைமேக்ஸை மாற்றவில்லை என விஜயகுமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.