பட ரிலீஸில் சிக்கி தவித்த 5 நடிகர்கள்.. விஜய் முதல் சிம்பு வரை சந்தித்த பிரச்சனைகள்

கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு தமிழ் சினிமா தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது ஒவ்வொரு வாரமும் வழக்கமாகப் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனாலும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் சில பிரச்சனைகளால் சிக்கலை சந்திக்கிறது.

சிலம்பரசன்: நடிகர் சிம்புவின் படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக சில தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஒரு முறை சிம்பு திரைப்படங்களில் நடிப்பதற்கு சிகப்பு அட்டை வழங்கப்பட்டது. தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் ரிலீசுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு தயாரிப்பாளருக்கும், பைனான்ஸ் இருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், அது ஒரு சிறிய சந்திப்பிற்கு பிறகு சரி செய்யப்பட்டு திட்டமிட்டபடி மாநாடு படம் திரைக்கு வந்தது. இதற்கு முன்னதாக சிம்புவின் வாலு திரைப்படம் இதே சிக்கலை சந்தித்தது. நடிகர் விஜய் அப்போது சிம்புக்கு உதவி செய்தார்.

சூர்யா: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் கஜினி. இப்படம் டிஜிட்டல் மயமாக்கல் இல்லாதபோது 2005 இல் வெளியானது. அதனால் இப்படம் வழக்கத்திற்கு மாறான சிக்கலை சந்தித்தது. தமிழ்நாடு முழுவதும் ரில் பொட்டிகள் விநியோகம் செய்ய தாமதமானதால் ஒரு சில பகுதிகளில் கஜினி படம் தாமதமாக தொடங்கப்பட்டது. மேலும் சில பகுதிகளில் ஆரம்பக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

தளபதி விஜய்: நடிகர் விஜய்யின் காவலன் திரைப்படம் வெளியாகும் போது போதிய தியேட்டர்கள் கிடைக்காததால், காவலன் படம் வெளியாகும் ஒரு நாள் முன்னரே சிக்கலை சந்தித்தது. ஆனால், விஜய் இந்தப் பிரச்சனையை நிதானமாக கையாண்டார். மேலும் காவலன் படம் 1 ஆம் தேதி மாலை காட்சிகளில் இருந்து வெளியானது. அதேபோல் விஜய்யின் தலைவா பட டைட்டிலில் பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனையை எதிர்கொண்டு பத்து நாள் கழித்து தலைவா படம் தமிழகம் முழுவதும் வெளியானது.

கமலஹாசன்: கமலஹாசனின் விஸ்வரூபம் படம் தியேட்டரிலும், டிஜிட்டலிலும் ஒரே நாளில் வெளியிட அனுமதிக்கவில்லை. பொருளாதார ரீதியாக சிக்கலில் இருந்த கமலஹாசன், படத்தை வெளியிட அனுமதிக்காவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறுவேன் என அதிரடியாக அறிவித்தார். பின்பு கமலஹாசன் ஒரு சிலரின் ஆதரவுடன் பிரச்சினையை தீர்த்து வைக்கப்பட்டதால் அறிவிக்கப்பட்ட தேதியை விட சில நாள் தள்ளி விஸ்வரூபம் படம் வெளியானது.

தனுஷ்: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. தனுஷின் நீண்ட கால தாமதம் ஆன படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நிதி பிரச்சினையால் சிக்கியதால் படம் சிக்கலை எதிர்கொண்டது. நிதி நெருக்கடியிலும் நவம்பர் 2019 இல் வெளியிடப்பட்டது. மீண்டும் ஒரு பைனான்சியர் எழுப்பிய கடைசி நிமிட பிரச்சினையால் படத்தின் முதல் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.