இந்த வருடம் சினிமா துறைக்கு நல்ல லாபகரமாகவே சென்று கொண்டிருக்கிறது. மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாக தயாராகும் படங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்தில் அதிகம் சம்பாதித்த ஐந்து பிரபலங்கள் பற்றி இங்கு காண்போம்.
ராஜமவுலி பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் இவரின் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்திருந்தனர். உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 1200 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது.
கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் படத்தை கமல் தயாரித்து, நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. அந்த வகையில் இந்த திரைப்படம் உலக அளவில் 450 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு வெளியான இவரின் டான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை சிவகார்த்திகேயன் லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். அந்த வகையில் இந்த திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு சிவகார்த்திகேயனின் சம்பளமும் கணிசமாக உயர்ந்தது.
மணிரத்தினம் சில வாரங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வரை அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படத்தை மணிரத்னம் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாகி 15 நாட்களுக்குள்ளாகவே 500 கோடியை நெருங்கி இருக்கிறது. இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட திரைப்படங்களை அடுத்தடுத்து தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தால் அதிக லாபத்தை பார்த்துள்ளது. அந்த வகையில் இந்த நிறுவனம் அடுத்ததாக ரஜினியை வைத்து இரண்டு திரைப்படத்தை இயக்க இருக்கிறது. அதற்காக அவருக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. எல்லாம் பொன்னியின் செல்வனில் சம்பாதித்த பணம் தான்.