2022 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட டாப் 6 ஹீரோயின்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நிகிதா கேரக்டரில் நடித்த இவானா ரசிகர்களை நடிப்பால் திணறடித்திருக்கிறார்.
திரிஷா: மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் குந்தவையாக நடித்த திரிஷா, அந்தக் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருக்கிறார். 39 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், இப்போதும் தன்னுடைய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து குந்தவையாக இந்த வருடம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி 6-ம் இடத்தை பிடித்திருக்கிறார்.
சித்தி இட்னானி: தெலுங்கு திரையுலகில் பரிச்சயமான இவர், வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். இவர் க்யூட்டாக செய்யும் ஒவ்வொரு ரியாக்ஷன்களும் பார்ப்போரை வெகுவாக கவர்ந்திழுத்தது. ஆகையால் இந்த ஆண்டு இளசுகளை கவர்ந்த நடிகைகளின் லிஸ்டில் 5-ம் இடம் பிடித்திருக்கிறார்.
அதிதி சங்கர்: விருமன் படத்தின் மூலம் சினிமாவிற்கு என்று கொடுத்த அதிதி சங்கர் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் ‘மதுர வீரன்’ பாடலை பாடியதன் மூலம் ரசிகர்களின் மனதை வெகு சீக்கிரமே கொள்ளையடித்தார். இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் 2022 ஆம் ஆண்டு ட்ரெண்டங்கில் இருந்த நடிகைகளின் லிஸ்டில் 4-வது பிடித்திருக்கிறார்.
நித்யா மேனன்: ஸ்லிம்மாக இருக்கும் நடிகைகளின் மத்தியில் பப்லியாக இருந்தாலும் அழகு தான் என்று தனது திரை பயணத்தின் மூலம் வெற்றி கண்டுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி, 24, மெர்சல், இருமுகன், சைக்கோ போன்ற சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் தற்பொழுது தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்திலும் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இவர் 2022 ஆம் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டான நடிகைகளின் லிஸ்டில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐஸ்வர்யா லட்சுமி: மலையாள நடிகையான இவர் தமிழில் தனுஷ் உடன் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பெயர் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
அதன் பின் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படத்திலும் கதாநாயகியாக நடித்து இப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று ட்ரெண்டிங் நடிகைகள் 2-ம் இடத்தை பிடித்திருக்கிறார்
இவானா: 2012 ஆம் ஆண்டு மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர். பாலா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
இந்த படத்தில் இவானா நிகிதா கதாபாத்திரத்தில் பேசிய ‘சொல்லுங்க மாமா குட்டி’ என்ற வசனம் பயங்கர ட்ரெண்டில் உள்ளது. 2022 ல் வெளியான லவ் டுடே படத்தின் நடித்ததன் மூலம் பேமஸான இவானா ட்ரெண்டிங் கதாநாயகிகள் லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவ்வாறு இந்த 6 ஹீரோயின்கள் தான் இந்த வருடத்தை ஆக்கிரமிப்பு செய்ததுடன் சோசியல் மீடியாவிலும் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட கதாநாயகிகள் ஆவார்கள். அதிலும் நிகிதாவின் செம க்யூட்டான ரியாக்ஷன் மற்றும் டயலாக் ரசிகர்களை கதி கலங்க வைத்தது.