வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித் விஜய்க்கு அடுத்த வரிசையில் இருக்கும் ஐந்து ஹீரோக்கள்.. தொடர் தோல்வியால் வாய்ப்பு இழந்த விக்ரம்

டாப் ஹீரோக்களான அஜித், விஜய் படங்கள் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி விடுகிறது. அந்த வகையில் இவர்களின் அப்டேட் படங்களின் விமர்சனங்களை கொண்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் இரண்டாம் நிலை ஹீரோக்களின் படங்களும் மக்களின் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் அஜித், விஜய்க்கு அடுத்து அவ்வரிசையில் இருக்கும் ஐந்து ஹீரோக்கள் பற்றி இங்கு காணலாம்.

Also Read: உச்ச நட்சத்திரங்களை பார்த்தாலே வெறுப்பாகும் இயக்குனர்.. ரஜினி, கமல் இல்லாமலேயே கொடுத்த ஹிட் படங்கள்

சிம்பு: தன் உடல் எடையால் வாய்ப்பு இழந்து காணப்பட்ட இவர் ஒரு இடைவேளைக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார். அதைத்தொடர்ந்து 2022ல் வெளிவந்த வெந்து தணிந்த காடு இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. அதன் பின் வெளியாகிய பத்து தல படத்தின் பட்ஜெட் ஆக பார்க்கையில் 30 கோடி அதன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 65 கோடிக்கு மேல் வசூலித்தது. இதை தொடர்ந்து கமலின் ராஜ்கமல் புரொடக்ஷனில் எஸ் டி ஆர் 48 படம் வர இருக்கும் நிலையில் தற்பொழுது அதன் எதிர்பார்ப்பு பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

சூர்யா: தன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் களம் இறங்கினார் ரோலக்ஸ். இது அவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. மேலும் தற்போது சோசியல் மீடியாவில் இவரின் கங்குவா வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் வாடி வாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். மேற்கொண்டு இவர் டாப் இயக்குனர் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Also Read: விஜய் அண்ணாவை புடிச்சி தொங்குனது போதும்.. ஷாருக்கான்-ஐ குருவாக ஏற்றுக் கொண்ட அட்லீ.!

தனுஷ்: சமீபத்தில் வெங்கியின் இயக்கத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்த படம் தான் வாத்தி. இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருப்பார். மேலும் படம் நூறு கோடிக்கு மேல் வசூலை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். இதனின் எதிர்பார்ப்பும் மக்களிடையே எழ ஆரம்பித்துவிட்டது.

சிவகார்த்திகேயன்: 2021ல் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் டாக்டர். இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். இப்படம் இவருக்கு நூறு கோடி வசூலை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து 2022-ல் வெளிவந்த பிரின்ஸ் படம் மக்களின் எதிர்மறை விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரின் மாவீரன் படம் ஜூனில் வெளிவர உள்ளது. அவ்வாறு இருப்பின் இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் ஆக இவரின் அயலான் படம் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: விஜய்க்கு வலை வீசும் இளம் நடிகை.. த்ரிஷாவை ஓரம் கட்ட வரும் 19 வயசு செல்லமான ஹீரோயின்

விஜய் சேதுபதி: விக்ரம் படத்தில் இவரின் மாறுபட்ட நடிப்பு மக்களின் வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் கால்ஷீட் கொடுத்து வருகிறார். மேலும் தன் திறன் பட்ட நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதுவரை 12 படங்களில் இவர் கமிட்டாகி இருக்கிறார்.

இவர்களை ஒப்பிடுகையில் நடிகர் விக்ரம் நடித்து வெளிவந்த மகான், கோப்ரா இவருக்கு ஃபெயிலியர் படமாக அமைந்தது. ஆகையால் இத்தகைய பட்டியலில் இடம் பிடிக்காத இவர் தற்போது தங்கலான் என்னும் படத்தில் தன் முழுமுயற்சியை போட்டு வருகிறார்.

Also Read: மலையாள சினிமாவில் ரஜினி நடித்த 2 படங்கள்.. கமலுடன் இணைந்து போட்ட வெற்றி கூட்டணி

Trending News