Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

1000 ஏக்கர் நிலம், 155 வீடுகளை வாங்கி குவித்த ஒரே நடிகர்.. பயந்து போய் அரசாங்கம் போட்ட உத்தரவு

1000 ஏக்கர் நிலம், 155 வீடுகளை வாங்கி குவித்த ஒரே நடிகர்.. பயந்து போய் அரசாங்கம் போட்ட உத்தரவு

30களில் லட்சாதிபதியாக கொடிகட்டி பறந்த ஒரே நடிகரின் சொத்து விவரத்தை பார்த்து, அரசாங்கமே பயந்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் இவருக்கு தான் முதலிடம். அந்த அளவிற்கு இவர் செய்த சாதனைகள் நிறைய உள்ளன. தமிழ் சினிமாவில் இரட்டை வேடம் என்பதை அறிமுகப்படுத்தியவரே அந்த காலத்தில் இவர்தான். இவர் 1940ல் வெளியான உத்தமபுத்திரன் என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததன் மூலம், ஒரே நடிகர் இரு வேடங்களில் நடிக்கும் தமிழ் சினிமா மரபு தோன்றியது.

அதன் பிறகு மங்கையர்க்கரசி படத்தில் மூன்று வேடங்களில் முதன் முதலாக நடித்தவரும் பி யு சின்னப்பா தான். அது மட்டுமல்ல ஜெகதலப்பிரதாபன் படத்தில் 5 வேடங்களிலும் நடித்து அசத்தினார். இவரைப் பின்பற்றி தான், அதன் பிறகு சிவாஜி நவராத்திரி படத்தில் 9 வேடங்களிலும், தசாவதாரம் படத்தில் உலக நாயகன் கமலஹாசன் 10 வேடங்களிலும் நடித்திருப்பார்கள்.

மேலும் பி யு சின்னப்பா மொத்தமாகவே தமிழ் சினிமாவில் 26 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருடைய படங்கள் அனைத்தும் 100 நாட்களுக்கு மேல் திரையில் தாறுமாறாக வசூலை வாரி குவித்தது. இதனால் 30களில் அவர் கதாநாயகனாக நடிக்கும் போது ஒரு படத்திற்காக மட்டும் அசால்டாக ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கி இருக்கிறார்.

இவ்வாறு அந்த காலத்திலேயே லட்சாதிபதியாக இருந்த பி யு சின்னப்பா, உண்மையாகவே ராஜா மாதிரி வாழ்ந்தவர். நடித்து சம்பாதித்த பணத்தில் 1000 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறார் மற்றும் 155 வீடுகள் வாங்கியவர். இவர் வாங்கும் சொத்துக்களை பார்த்து பயந்து அரசாங்கம், இனிமேல் இவர் சொத்து வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள அளவிற்கு பெரிய மனிதர்.

அவ்வளவு வசதியாக இருந்த சின்னப்பாவின் குடும்பம் இப்போது எந்த சொத்து சுகமும் இல்லாமல், ஒருவேளை சாப்பிட கூட வழி இல்லாமல் நிற்கதியாய் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில்  இவருடைய பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படும்.

இவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என பல அறிவிப்புகள் வெளிவந்தன. ஆனால் இவர் இறந்த பிறகு இவரது சமாதிக்கு புதுக்கோட்டைக்கு சங்கிலி முருகனைத் தவிர ஒரு நடிகன் கூட இன்று வரை சென்றதில்லை என்பது கேவலமான விஷயம் என தெரிய வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.