Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கமல் சமாதானப்படுத்தியும் தட்டிக் கழித்த கொம்பன் முத்தையா.. காத்திருந்தவருக்கு மடியிலே விழுந்த லட்டு

கமல் சமாதானப்படுத்தியும் தட்டிக் கழித்த கொம்பன் முத்தையா.. காத்திருந்தவருக்கு மடியிலே விழுந்த லட்டு

ராஜ்கமல் பேனரில் கொம்பன் முத்தையா இயக்கவிருந்த படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. ஆனால் கமல் வயதானதால் படத்தில் சில விஷயங்களை செய்ய முடியாமல் அந்தப்படத்தில் ஆர்யாவை ஒப்பந்தம் செய்தனர். ஏனென்றால் இந்த படத்திற்கு கமல் கேட்ட சம்பளமோ 15 […]

ராஜ்கமல் பேனரில் கொம்பன் முத்தையா இயக்கவிருந்த படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. ஆனால் கமல் வயதானதால் படத்தில் சில விஷயங்களை செய்ய முடியாமல் அந்தப்படத்தில் ஆர்யாவை ஒப்பந்தம் செய்தனர். ஏனென்றால் இந்த படத்திற்கு கமல் கேட்ட சம்பளமோ 15 கோடி. ஆகையால் இதனால் தான் அவர்களுக்கு இடையே பிரச்சனை வந்தது.

அதன்பின் ஆர்யா இந்த படத்திற்கு கமல் பேனர் வேண்டாம் வேறு ஒரு தயாரிப்பாளரை பார்க்கலாம் என்று ஆர்யா முத்தையாவிடம் சொல்ல, முத்தையா ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். கமல் முத்தையாவை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் கேட்கவில்லை.

இப்பொழுது இந்த படத்திற்கு இன்னொரு தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லியது. யானை படத்தை எடுத்த ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை எடுக்க தயாராகி விட்டனர். கூடிய விரைவில் கொம்பன் முத்தையா, ஆர்யா படம் ரெடியாகிறது.

ஏற்கனவே ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் பெரிய படங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. இப்பொழுது லட்டு போல் அமைந்தது கொம்பன் முத்தையா படம். இவர் முதலில் கமலிடம் கதை சொல்லியபோதே கமலுக்கு கதை ரொம்ப பிடித்திருந்தது.

ஆனால் கமல் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் ஆர்யா சொல்லைக் கேட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் நிறுவனமும் கொம்பன் முத்தையா கைவைத்து சூப்பர் ஹிட் படத்தை தயாரித்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவிக்க காத்திருக்கிறது.

மறுபுறம் கமல், நல்ல கதைக்களத்தை கொண்ட படம் கைகழுவி விட்டதே என்று மீண்டும் மீண்டும் கொம்பன் முத்தையாவிடம் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் அவரிடம் பிடிகொடுக்காத கொம்பன் முத்தையா ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திடம் சரணடைந்துவிட்டார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.