Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விக்ரம் படத்தால் புது அவதாரம் எடுக்கப்போகும் லோகேஷ்.. தளபதி 67ல் இருக்கும் சர்ப்ரைஸ்

விக்ரம் படத்தால் புது அவதாரம் எடுக்கப்போகும் லோகேஷ்.. தளபதி 67ல் இருக்கும் சர்ப்ரைஸ்

ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியால் அதிக பிரபலமாகி இருக்கிறார். இவருடைய அடுத்த படத்திற்கான அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் விஜய்யை வைத்து […]

ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியால் அதிக பிரபலமாகி இருக்கிறார். இவருடைய அடுத்த படத்திற்கான அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இணையும் இந்த கூட்டணியின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த திரைப்படம் பற்றி சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது தளபதி 67 திரைப்படத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டையில் பல சாதனைகளை செய்து வருகிறது.

இதுவரை கமல் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக லாபம் பார்த்த திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழிந்த பின்னரும் வசூல் குறையாமல் பாக்ஸ் ஆபீசை கலக்கி வருகிறது.

இதனால் தயாரிப்பாளரான கமல்ஹாசன் இயக்குனருக்கு பேசியதற்கு அதிகமாகவே சம்பளத்தை வாரி கொடுத்து இருக்கிறார். மேலும் அவர் பல பரிசுப் பொருட்களை படக்குழுவினருக்கு கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் விக்ரம் திரைப்படத்தின் மூலம் தனக்கு கிடைத்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்ய இருக்கிறார். அதன் தொடக்கமாகவே இவர் விஜய் நடிக்கும் திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக மாற இருக்கிறார். இந்தத் தகவல் தற்போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வரிசையில் இவர் தன் குருநாதர் கமல் பாணியில் தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.