Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

லட்சியத்திற்காக பெருந்தன்மையாக நடந்து கொண்ட மணிரத்தினம்.. அதுக்குன்னு இப்படியா?

லட்சியத்திற்காக பெருந்தன்மையாக நடந்து கொண்ட மணிரத்தினம்.. அதுக்குன்னு இப்படியா?

எம்ஜிஆர் முதல் கமல் வரை பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க பல முயற்சிகள் செய்தும், தற்போது மணிரத்தினம் தான் அதை முடித்துக் காட்டி உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் […]

எம்ஜிஆர் முதல் கமல் வரை பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க பல முயற்சிகள் செய்தும், தற்போது மணிரத்தினம் தான் அதை முடித்துக் காட்டி உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவை தாண்டி அனைத்து மொழி ரசிகர்களும் இப்படத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இப்படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசை மேலும் வலுசேர்த்துள்ளது. பொன்னியின் செல்வன் படம் கிட்டதட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மணிரத்தினம் 250 கோடியும், லைகா 250 கோடியும் போட்டுள்ளனர். இவ்வாறு சரிக்கு சமமாக பணத்தை போட்டு படத்தை எடுத்துள்ளனர்.

இதனால் படம் வெளியான பிறகு லாபமும் சரிக்க சமமாக தான் பிரிக்கப்படும். ஆனால் 70 சதவீத லாபத்தை லைக்காவிற்கு, 30 சதவீத லாபம் மட்டும் தனக்கு போதும் என மணிரத்தினம் சொல்லி உள்ளாராம். ஏனென்றால் இப்படத்தின் லாபத்தை மணிரத்தினம் எதிர்பார்க்கவில்லையாம்.

தன்னுடைய கனவு, இலட்சியத்திற்காக பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் எடுத்துள்ளார். அதற்கு உறுதுணையாக மணிரத்தினத்தின் மீது நம்பிக்கை வைத்து லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனால் தன் மீது நம்பிக்கை வைத்து எடுக்க சம்மதித்ததால் அதிகப்படியான லாபத்தை லைக்காவிற்கு தந்துள்ளார் மணிரத்தினம். இந்நிலையில் பொன்னின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் காண வேலைகள் தொடங்க உள்ளது. மேலும் இப்படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.