செகண்ட் இன்னிங்ஸில் செம ஹிட் கொடுத்த 5 ஹீரோக்கள்.. தனி ஒருவனாய் அசத்திய அரவிந்த்சாமி

90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகர்களாக சிலர் இருந்தனர். சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர்கள் தற்பொழுது ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். இந்நிலையில் செகண்ட் இன்னிங்ஸ் மூலம் செம ஹிட் கொடுத்த 5 ஹீரோக்களை இங்கு காணலாம். 

சரவணன்: அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பருத்திவீரன். இதனைத் தொடர்ந்து கார்த்தி அறிமுகமான இப்படத்தில் அவருக்கு சித்தப்பாவாக செவ்வாழை என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டையும் பெற்றுள்ளது. பருத்திவீரன் திரைப்படம் சினிமாவில் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

அர்ஜுன்: பி எஸ் மித்ரன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு விஷால், அர்ஜுன், சமந்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இப்படத்தில் அர்ஜுன் வெள்ளை டெவில் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் மிரட்டி இருப்பார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில்  சூப்பர் ஹிட் கொடுத்தது. இரும்புத்திரை திரைப்படம் அர்ஜுனுக்கு சினிமாவில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

அரவிந்த்சாமி: இயக்குனர் எம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இப்படம் அதிரடியான திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இதில் ஜெயம் ரவிக்கு வில்லனாக அரவிந்த்சாமி சித்தார்த் அபிமன்யு எனும் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருப்பார். படத்தில் ஹீரோவுக்கே டப் கொடுக்கும் விதத்தில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் மிரட்டி இருப்பார். அந்த வகையில் இப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

மாதவன்: இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் இறுதிச்சுற்று. இதில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. அதுமட்டுமல்லாமல் மாதவனுக்கு நல்ல பெயரையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்த படமாக அமைந்தது.

அருண் விஜய்: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். படத்தில் வில்லனாக அருண் விஜய் நடித்திருப்பார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லனாக இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். என்னை அறிந்தால் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் திருப்புமுனையாக அமைந்தது.