கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்து சொன்ன 5 பிரபலங்கள்.. சக அரசியல்வாதியாய் வரவேற்ற கமல்

Tamizhaga Munnetra Kazhagam: நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் பற்றி ஆரம்பித்திருக்கும் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தன்னுடைய கட்சியை குறிப்பிட்டு, இதுதான் அவருடைய கட்சி கொள்கை என்பதை தெளிவாக விளக்கி சொல்லி இருக்கிறார். 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் விஜய்க்கு அவருடைய சக கலைஞர்கள் ஐந்து பேர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

விஜய்க்கு வாழ்த்து சொன்ன 5 பிரபலங்கள்

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் காக்கா கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினி நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி பற்றி ரொம்ப பெருமிதமாக பேசி இருந்தார். சமூக சேவை செய்வதற்காக அரசியலுக்கு வரும் விஜய்க்கு வாழ்த்துக்கள் என்றும் சொல்லியிருந்தார். இவர்கள் இருவருக்குள்ளும் நிறைய போட்டிகள் இருக்கிறது என வதந்திகள் பரப்பப்பட்டாலும், நேற்று விஜய் கட்சி தொடங்கியதை அறிவித்த பிறகு முதன் முதலில் ரஜினி தான் அவருக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

கமல்: விஜய்க்கு முன்னோடியாக சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி இருப்பவர்தான் நடிகர் கமலஹாசன். கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கியவர் இன்னும் தன்னை ஒரு ஆக்டிவ்வான அரசியல்வாதியாக வைத்திருக்கிறார். விஜய் கட்சி அறிவிப்பு வெளியானதும் கமல் அவருக்கு போன் செய்து கட்சி ஆரம்பித்ததற்கும், 2026 தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

அஜித்: விஜய் மற்றும் அஜித்குமார் இருவரும் சமகாலத்து போட்டியாளர்களாக இருந்தாலும் ஒவ்வொருவரின் முக்கியமான நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்ததே கிடையாது. தன்னுடைய நீண்ட கால நண்பரான விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதற்கு அஜித் வெளிநாட்டில் இருந்து போன் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

சூர்யா: நடிகர் சூர்யா மற்றும் விஜய் நீண்ட கால நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒவ்வொருவரின் முக்கியமான நிகழ்வுகளும் இரண்டு பேருமே தங்களுடைய பரஸ்பர நட்பை பகிர்ந்து கொள்ள தவறியதே கிடையாது. தற்போது விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கும் நடிகர் சூர்யா தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

விஜய் சேதுபதி: மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு இருந்தது. தற்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கியதன் அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஒரு நண்பராகவும், சக கலைஞராகவும் விஜய் சேதுபதி விஜய்க்கு தன்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்திருக்கிறார்.