Actor Simbu: சிம்பு சர்ச்சைக்குள் சிக்கி கண்ணா பின்னான்னு பெயரை கெடுத்து கொண்டதோடு, கேரியரிலும் கொஞ்சம் பின் தங்கி போய்விட்டார் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் சமீப காலமாக வால்தனத்தை எல்லாம் மூட்டை கட்டிட்டு ஓரளவுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டிருக்கிறார்.
ஆனாலும் இவரை நம்பி சில பிரபலங்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி அவதிப்பட்டு இருக்கிறார்கள். அதில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் இவரை நம்பி கிட்டத்தட்ட நாலரை கோடிகளை கொடுத்து ஏமாந்து போய் இருக்கிறார். ஏனென்றால் இந்த படம் மொத்தமும் பிளாப் ஆகி தயாரிப்பாளரை பிரச்சனையில் சிக்க வைத்திருக்கிறது.
அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. ஆனாலும் இந்த படத்திற்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிறைய பணத்தை வட்டிக்கு வாங்கி சொன்ன தொகைக்கும் மேல் செலவு செய்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் ரொம்பவே மனதளவில் வெறுத்துப் போய்விட்டார்.
இதனை அடுத்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் கொரோனா குமார் நடிப்பதற்கு ஒப்பந்தமான நிலையில் இன்னும் படபிடிப்பு தொடங்காமல் பிரச்சனை நீடித்துக் கொண்டே வருகிறது. இதனால் சிம்புவிடம் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டு ஐசரி கணேஷ் முழித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக காதல் மற்றும் ரொமாண்டிக் போன்ற படங்களை கொடுத்துட்டு வந்த கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த ஹிட் கொடுத்திருக்கிறார். இருந்தபோதிலும் சிம்புவிடம் பல பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவித்து இருக்கிறார் கௌதம் மேனன்.
அந்த வகையில் தற்போது கமல் தயாரிப்பிலும் சிம்பு அவருடைய 48வது படத்தை நடித்துக் கொண்டு வருகிறார். இப்பொழுது வரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. இதை இப்படியே சிம்பு தக்கவைத்துக் கொண்டால் அவருடைய அடுத்த அடுத்த கேரியரில் முன்னேறுவதற்கு படிக்கட்டாக அமையும்.