பவர்ஃபுல்லான டைட்டிலுடன் தயாராகும் 9 டாப் ஹீரோக்களின் படங்கள்.. இந்த மூன்றுக்கு தான் மவுசு அதிகம்

கோலிவுட்டில் பவர்ஃபுல்லான டைட்டில்களுடன் டாப் நடிகர்களின் 9 படங்கள் பரபரப்பாக ரெடியாகி கொண்டிருக்கிறது. அதிலும் மூன்று படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

துணிவு படத்திற்கு பிறகு அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்திற்கான டைட்டிலான விடாமுயற்சி என்பது, இன்று வெளியாகி ரசிகர்களை ஆரவாரப்படுத்தியுள்ளது. மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக உலக நாயகன் கமலஹாசன்- சங்கர் கூட்டணியில் உருவாகி கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உலக அளவில் இருக்கும் ரசிகர்களின் மத்தியில் நிலவுகிறது. அதேபோல் கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் ரிலீஸுக்காக தயாராக உள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர் படமும் தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

மேலும் அண்ணாத்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு கொடுத்த ஏமாற்றத்தை சரி செய்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன்- திலீப் குமார் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதிக்காகவும் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். அதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் கங்குவா படத்தில், இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு உலகத்தை இதில் காட்டப் போகின்றனர்.

அதை போல் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தையும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் பார்க்க காத்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக விக்ரம், ஆதிவாசி கெட்டப்பில் நடித்துக் கொண்டிருக்கும் தங்கலான் படமும் பவர்ஃபுல்லான டைட்டிலுடன் மிரட்ட காத்திருக்கிறது.

மேலும் சிங்கத்தின் பண்புகளையும் குணநலங்களையும் பிரதிபலிக்க கூடிய தளபதி விஜய்யின் லியோ படமும் நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட்டை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற விடுகின்றனர். இவ்வாறு இந்த 9 டாப் ஹீரோக்களின் படங்கள் தான் அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர். அதிலும் கேப்டன் மில்லர், லியோ, மாவீரன், தங்கலான் போன்ற 4 படங்களின் பவர்ஃபுல்லான டைட்டில் மூலம் மேலும் படத்திற்கான மவுசு கூடி இருக்கிறது.