சைலண்டாக சிம்புவை காலி செய்யும் புது ஹீரோ .. சிலம்பரசனுக்கு காமெடி நடிகரால் வந்த சோதனை!

நடிகர் சிம்பு தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியில் பயங்கரமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். மேலும் சமீபத்தில் பத்துதல படத்தின் ஆடியோ லாஞ்சின் போது தன்னுடைய ரசிகர்களிடம் இனி எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், இன்னும் கடுமையாக நான் உழைக்க தயாராக இருக்கிறேன் என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசினார்.

மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் வெற்றி என்பது சிம்புவே எதிர்பார்க்காத ஒன்றுதான். இதனால் பத்துதல திரைப்படத்தின் வெற்றியின் மீது சிம்புவுக்கு ஒரு அபாரமான நம்பிக்கை இருந்தது. மேலும் மீண்டும் பழைய இடத்திற்கு வந்து விட்டோம், விட்டதை பிடித்து விட்டோம் என்று கூட அவர் ரொம்பவும் தைரியமாக பொது மேடைகளில் பேச ஆரம்பித்தார்.

ஆனால் சிம்புவின் பத்து தல திரைப்படத்திற்கு முந்தைய இரண்டு படங்களுமே அவர் தனிக்காட்டு ராஜா போல் களத்தில் குதித்தது. படங்களும் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தன. ஆனால் பத்து தல திரைப்படத்துடன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த விடுதலை திரைப்படம் மோதியது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக போகிறது என்ற அறிவுப்பு வெளியான போது சினிமா வட்டாரமே வியப்பாக பார்த்தது.

எப்படியும் இந்த போட்டியில் சிம்பு தான் ஜெயிப்பார் என்று ரிலீசுக்கு முன்னரே உறுதி செய்யப்பட்டது. அதற்கு ஏற்ற மாதிரி பத்து தல திரைப்படத்தை ஒப்பிடும்போது விடுதலை திரைப்படத்திற்கு திரையரங்குகள் மற்றும் ஷோ டைம் ரொம்பவும் கம்மியாகத்தான் ஒதுக்கப்பட்டது. மேலும் சிம்புவின் படத்திற்கு முதல் நாள் ரிலீஸ் என்பது மிகப் பெரிய வரவேற்பு கொண்டாட்டமாக இருந்தது.

ஆனால் தற்போது இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி ஒரு வாரங்கள் கடந்த நிலையில் மொத்த நிலவரமும் தலைகீழாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் விடுதலை படத்தின் விமர்சனங்களும், வரவேற்புகளும் பாசிட்டிவாக மாற மக்கள் அனைவரும் இந்த படத்தை பார்ப்பதற்கு ஆர்வம் ஆகிவிட்டனர். இதனால் இந்த வார நிலவரப்படி விடுதலை படத்தின் ஷோ டைம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு பக்கம் சிம்பு படத்திற்கான ஷோ டைம் மற்றும் திரையரங்கு எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும், இன்றைய நிலவரப்படி படத்தின் வசூல் 55 கோடியாக உள்ளது. விடுதலை படத்தின் வசூல் 35 கோடி. இதனால் படத்தின் ஷோ டைம் மற்றும் திரையரங்குகளை மட்டும் குறைப்பது யாருடைய தலையீட்டினால் நடக்கிறது என்பது சரியாக தெரியவில்லை.