சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த பிரியா பவானி சங்கர் தற்போது வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்தியன் 2, பத்து தல உட்பட பல திரைப்படங்களில் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
பிரியா பவானி சங்கர் என்னதான் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும். அவருடைய சம்பளம் மட்டும் உயரவில்லை. ஆனால் இவரைப் போன்று டாப் நடிகர்கள்கூட நடித்த பல நடிகைகள் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர்.
ஆனால் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் மற்றும் அருண் விஜய் உடன் யானை உள்ளிட்ட படங்களில் நடித்தும், அவருக்கு லட்சத்தில்தான் சம்பளம் வருகிறது.
இதனால் பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தினாலும், அதைக் கொடுக்க முடியாது என்று தயாரிப்பாளர்களும் சொல்லி விடுகின்றனர். அதனால் கம்மியான சம்பளத்தில் தான் அவர் நடிக்கிற நிலை ஏற்படுகிறது.
மேலும் பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் படங்களில் அவருக்கான சீன் ரொம்ப கம்மியானத்தான் இருக்கிறது. தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் பிரியா பவானி சங்கர் வெறும் 5 காட்சிகளில் மட்டுமே வந்திருப்பார்.
இதனால் இனிமேல் கேரக்டர் ஸ்கோப் இருக்கும் படங்களில் மட்டுமே நடிக்க போகிறார். அப்பொழுதுதான் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு அதிகப்படுத்த முடியும் என்று பிரியா பவானி சங்கர் முடிவெடுத்திருக்கிறார்.