கடன் தொல்லையிலும் நண்பனுக்காக ரிஸ்க் எடுத்த சிவகார்த்திகேயன்.. நயன்தாரா பட இயக்குனருடன் கூட்டணி

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக அதிதி சங்கர் நடிக்கிறார். மேலும் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இந்த படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். மாவீரன் திரைப்படம் வரும் தீபாவளியன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படமே பல சிக்கலில் தான் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் அவர் ஏற்கனவே நடித்து கடந்த தீபாவளியன்று ரிலீசான பிரின்ஸ் திரைப்படம் தோல்வியை தழுவியதால் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் கடன் பிரச்சனை வேற ஆரம்பம் ஆகிவிட்டது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் கடனில் தவித்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய நண்பனுக்காக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறாராம். சிவா ஏற்கனவே தன்னுடைய நீண்ட நாள் நண்பரான அருண் ராஜாவை இயக்குனர் ஆக்கத்தான் கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். அந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் வெற்றியும் கண்டார்.

தற்போது இந்த லிஸ்டில் சேர்ந்திருப்பவர் தான் நடிகர் சூரி. சூரி, சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பும் இருக்கிறது. தற்போது தன்னுடைய நண்பரான சூரியை ஹீரோவாக நடிக்க வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவை வைத்து கூலாங்கள் என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் தான் இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் பூஜை வேலைகள் முடிந்த நிலையில், மதுரையில் 18 நாட்கள் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்திருக்கிறதாம்.

நடிகர் சூரி ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். இதற்கு இடையில் சிவகார்த்திகேயன் சூரியை அடுத்த படத்தில் ஹீரோவாக்க தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்.