இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்றைய கோலிவுட் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். வித்தியாசமான கதை களத்தில் இவர் எடுத்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் தான். மாநகரம் படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய இவர் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு சினி மேட்டிக் யுனிவர்சையே இவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்பியது. உலக நாயகன் கமலஹாசனுக்கு இந்தப் படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் தளபதி விஜய் உடன் கைகோர்த்து இருக்கிறார்.
ஏற்கனவே இவர்களது கூட்டணியின் உருவான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த வரிசையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படப்பிடிப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற வருகிறது. நடிகர் விஜய்யும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் உடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. மேலும் நடிகர் விஷாலுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தளபதி 67 திரைப்படம் அதிரடி ஆக்சன் திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் விஜய்க்கு மொத்தம் ஏழு வில்லன்கள் நடிக்க இருக்கிறார்கள். இதில் நடிகர் சீயான் விக்ரமை நடிக்க வைக்க லோகேஷ் அணுகி இருக்கிறார். ஆனால் விக்ரம் தனக்கு இதில் முக்கியத்துவம் இல்லை என்று கூறி மறுத்துவிட்டாராம்.
மேலும் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரம் திரைப்படத்தில் பயங்கர வைரலாகிய ரோலெக்ஸ் கேரக்டரை முதலில் விக்ரம் தான் பண்ண வேண்டும் என்று லோகேஷ் விரும்பி இருக்கிறார். ஆனால் அப்போதும் அந்த கேரக்டரில் தனக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி விக்ரம் மறுத்துவிட்டாராம்.