தானாக வந்து வலையில் சிக்கிய ஆடு.. பெரும் தொகையை கறக்க விஷால் போடும் பிளான்

நடிகர் விஷாலுக்கு இப்போதைக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் நன்றாக அமையவில்லை. கடைசியாக நடித்த எனிமி, லத்தி படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. சொந்த தயாரிப்பிலும் படம் எடுத்து பார்த்தார், வெளியிலும் படம் எடுத்து பார்த்தார் எதுவும் செட் ஆகவில்லை. இப்போது எப்படியாவது ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறாரா.

நடிகர் விஷாலுக்கு கடன் தொல்லையும் அதிகரித்து விட்டது. இவருக்கு அந்த அளவுக்கு கடன்கள் இல்லையென்றாலும் இவருடைய தந்தை நடத்தி வரும் கிரானைட் பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த கடன் விஷாலிடம் தானாக வந்து சேர்ந்து விட்டது.

இந்த நிலையில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஷாலை அணுகியுள்ளார். தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார் லோகேஷ். ஆனால் விஷால் இந்த படத்தில் நடிக்கிறேன் , நடிக்க மாட்டேன் என எந்த பதிலும் சொல்லவில்லையாம்.

லோகேஷ் வீடு தேடி சென்றும் விஷால் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருக்க காரணம், எப்படியும் சம்பள தொகையை பற்றி பேசுவார்கள் அப்போது ஒரு மிகப் பெரிய தொகையை கேட்டு விடலாம் என திட்டம் போட்டு விட்டார் விஷால். கடன் பிரச்சனையில் இருக்கும் விஷாலுக்கு இது மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்து விட்டது.

ஏற்கனவே இந்த கேரக்டரில் நடிக்க பிரித்விராஜ் மற்றும் அர்ஜுன் மறுத்து விட்டனர். அதனை தொடர்ந்து தான் விஷாலை அணுகியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனால் தான் விஷால் இப்படி ஒரு பிளானை பக்காவாக போட்டு இருக்கிறார்.

இந்த படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் த்ரிஷா , சஞ்சய்தத், கௌதம்மேனன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது விஷாலும் இணைய வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் டிசம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது.