ரஜினி விட்டதை பிடித்த கமல்.. அதை பிடிக்க முடியாமல் ஏன்டா விட்டோம் என்று வருத்தப்படும் நடிகர்கள்.!

Rajinikanth – Kamal Haasan: ஒரு படத்தின் வெற்றி மற்றும் தோல்வி என்பது யாராலுமே கணிக்க முடியாது. படம் ரிலீஸ் ஆகி அது மக்களிடம் செல்லும் வரை எதையுமே முடிவு செய்ய முடியாது. இதனால் தான் நிறைய நடிகர்கள் மிகப்பெரிய ஹிட் படங்களை கூட கைநழுவ விட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு சில படங்களை நம்பி தங்களுடைய உழைப்பை போட்டு தோல்வியையும் சந்தித்து இருக்கிறார்கள்.

அப்படித்தான் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படமும். இந்த படத்தின் கதை முதன் முதலில் சொல்லப்பட்டது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் தான். லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் கதையை ரஜினியிடம் சொல்லி, அவர் ரிஜெக்ட் செய்த பிறகு கமல் கதையில் சிறிது மாற்றம் செய்து நடித்திருக்கிறார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தான் தற்போது ரஜினி லோகேஷ் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என நடிக்க இருக்கிறார்.

Also Read:பிக் பாஸ் சீசன் 7ல் வெளிவந்த லியோ சீக்ரெட்.. மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த லோகேஷ்

ரஜினியைப் போலவே ஒரு சில நடிகர்கள் விக்ரம் படத்தை ரிஜெக்ட் செய்து விட்டு தற்போது புலம்பித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் அவர்களுடைய சினிமா பாதையே வேறு மாதிரி மாறி இருக்கும். எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறோம் என படம் ரிலீஸ் ஆகி, வெற்றி பெற்ற பின்பு தான் இவர்களுக்கு புரிந்து இருக்கிறது.

விக்ரம் படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கேரக்டர் என்றால் அது ரோலக்ஸ் தான். இந்த கேரக்டரில் நடித்து தற்போது பெரிய அளவில் ரீச் அடைந்திருப்பது நடிகர் சூர்யா. ஆனால் முதலில் இந்த கேரக்டருக்காக பேசப்பட்டது நடிகர் விக்ரமிடம் தானாம். அவர் ரிஜெக்ட் செய்த பிறகு தான் சூர்யா இதில் ஒப்பந்தமாகி இருக்கிறார். விக்ரம் நடித்திருந்தாலும் கண்டிப்பாக பெரிய அளவில் அவருக்கு ஓப்பனிங் இருந்திருக்கும்.

Also Read:சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ்.. தடையை மீறி வாய்ப்பு தர காரணம்

விக்ரம் படத்தில் மாஸ் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலக்கி இருந்தார். முதலில் இந்த கேரக்டருக்காக பேசப்பட்டது நடிகர் லாரன்ஸ் இடம் தான். ஆனால் அவர் அந்த கேரக்டரில் நடிப்பதற்கு மறுத்துவிட்டார். லாரன்ஸ் சமீபத்தில் நடிக்கும் எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. விக்ரம் படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்பட்டு இருப்பார்.

மேலும் அந்தப் படத்தில் உலக நாயகன் கமலஹாசனின் மருமகளாகவும், காளிதாஸ் ஜெயராமின் மனைவியாகவும் முதலில் நடிக்க இருந்தது நடிகை பிரியா ஆனந்த் தான். ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டார். அந்த கேரக்டரில் நடித்த நடிகையும் ரசிகர்களிடையே நல்ல ரீச் அடைந்தார். விட்டதை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று தான் பிரியா ஆனந்த் தற்போது லியோ படத்தில் நடித்திருக்கிறார்.

Also Read:பாதியிலேயே கழட்டி விட்டு டாட்டா சொன்ன நயன்தாரா.. மொத்த பிளானையும் மாற்றிய லோகேஷ்