பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய வாரிசான அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அதிதிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கம் இந்த படத்தில் சரிதா, மிஷ்கின், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்மரமாக நடந்து வருகிறது.
மேலும் அதிதி வாரிசு நடிகை என்பதால் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் அறிமுக நடிகைக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்காது.
இந்நிலையில் அடுத்ததாக வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் அதிதி நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. விஜய்யின் மாமா பிரிட்டோ தயாரிக்கும் படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க உள்ளார். இந்த படத்தில் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியும் ஆன ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக தான் அதிதி ஷங்கர் நடிக்க விருக்கிறாராம். மாவீரன் படம் வெளியாவதற்கு முன்பே இவ்வாறு அடுத்த அடுத்த படங்களில் அதிதி ஒப்பந்தமாகி வருகிறார். அதுமட்டுமின்றி இப்போது சம்பளத்தையும் அதிகபடியாக உயர்த்தி உள்ளாராம் .
அதாவது மாவீரன் படத்திற்கு கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக அதிதி பெற்றிருந்தார். இப்போது ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக 5 லட்சம் கூடுதலாக 30 லட்சம் சம்பளம் கேட்டுள்ளாராம். படக்குழுவும் அதிதி கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளதாம். இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.