அடிக்கடி லைக்கா புரொடக்ஷனுக்கு செல்லும் ஐஸ்வர்யா.. கேள்விக்குறியாகும் சிபி சக்கரவர்த்தியின் தலைவர்-170

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் மோசமான விமர்சனங்களை சந்தித்ததால் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில் தலைவர் 170 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சிபிச் சக்கரவர்த்தி தன்னுடைய முதல் படத்திலேயே 100 கோடி வசூலை பெற்றார். இதைத் தொடர்ந்த ரஜினியிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கி உள்ளார்.

கிட்டத்தட்ட தலைவர் 170 படத்தை சிபிச் சக்கரவர்த்தி தான் இயக்குகிறார் என்பது உறுதியான நிலையில் இப்போது அவருக்கு பெரும் ஆபத்து ஒன்று வந்துள்ளதாம். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடிக்கடி லைக்கா ப்ரொடக்ஷனுக்கு சென்று வருகிறாம்.

அதாவது ஐஸ்வர்யா ரஜினிக்கு ஒரு கதையை ரெடி பண்ணி இருந்தாராம். அந்த கதையை ரஜினிக்கு போட்டி காட்டி அனுமதியும் வாங்கி விட்டார். இதனால் தற்போது ஐஸ்வர்யா ரஜினி படத்தை உடனே இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளாராம். இப்படத்தை தயாரிக்க லைக்காவிடம் அனுமதி வாங்க நடையாய் நடந்து வருகிறாராம்.

கண்டிப்பாக தலைவர் 170 படத்தை லைக்கா தான் தயாரிக்க உள்ளது. ஆனால் சிபி சத்தவர்த்தி அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் லைக்கா உள்ளதாம். சூப்பர் ஸ்டாரின் மகள் என்பதால் ஐஸ்வர்யாவை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

இதனால் தலைவர் 170 படம் பறி போகுமா என்ற குழப்பத்தில் சிபி சக்கரவர்த்தி உள்ளார். ஆனால் கொடுத்த வாக்கில் இருந்து ரஜினி எப்போதுமே பின்வாங்க மாட்டார் என்பது நெல்சன் விஷயத்திலேயே அனைவரும் அறிந்ததுதான். இதனால் நிச்சயமாக சிபி சக்கரவர்த்திக்கும் ரஜினி வாய்ப்பு கொடுப்பார்.