விக்னேஷ் சிவனால் தள்ளிப்போகும் ரஜினி படம்.. அஜித் வேண்டாம் என சொன்னதன் பின்னணி

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் 62-வது படத்தில் யார் இயக்குனர் என்பது தான் இப்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. ஏனென்றால் பல மாதங்களாகவே ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார் என சொல்லப்பட்டது.

இதனால் ஏகே 62 படத்தினை விக்னேஷ் சிவன் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி, வரும் தீபாவளிக்கு படம் வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில் படம் நிறுத்தப்பட்டது. தற்பொழுது வேறு இயக்குனரை தேடி வருகிறார். அதனால் அஜித் படம் தீபாவளி அல்லாமல் பொங்கலுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

அஜித் படம் பொங்கலுக்கு போனதால் அக்டோபர் வெளியாகும் ஜெயிலர் திரைப்படத்தை போட்டியின்றி வெளியிட சன் பிக்சர்ஸ் தீபாவளியன்று வெளியிடுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படம் தீபாவளிக்கு வருவதால் விஜய் நடிக்கும் படத்தை அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி முன்னரே வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் என்ற ஒரு இயக்குனர் மாற்றத்தினால் பல படங்களின் வெளியீடு தேதியை மாறி இருக்கிறது. ஏகே 62 & ஏகே 63 போன்ற இரண்டு படங்களை கைப்பற்றும் போட்டியில் இயக்குனர் மகிழ் திருமேனி, விஷ்ணு வரதன்,  அட்லி,  ஏஆர் முருகதாஸ் போன்ற நான்கு இயக்குனர்கள் உள்ளனர். அதிலும் இந்த நான்கு இயக்குனர்களும் இரண்டு பேர் உறுதியாகியுள்ளனர்.

சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான கழகத் தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் 62-வது படத்தை இயக்க உள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது. இவரைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 63 படத்தை அட்லி இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளன. விஜய்க்கு தொடர் வெற்றிகளை கொடுத்த அட்லி, தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் ஏகே 63 படத்தை அட்லி இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இவ்வாறு அஜித் படத்தின் இயக்குனர்களை தேர்வு செய்வதில் திடீர் மாற்றம் ஏற்பட்டதால் ரஜினி மற்றும் விஜய் நடிக்கும் படங்களின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.