முரட்டுத்தனமான வெயிட்டால் எல்லா பக்கமும் பறிபோன வாய்ப்பு.. பழைய சிம்புவாக மாறிய நடிகர்

நடிகைகளை கம்பேர் பண்ணும் போது நடிகர்கள் அவ்வளவு ஈசியாக மற்ற மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடையே வெற்றி பெற்று விட முடியாது. சமந்தாவோ, நயன்தாராவோ சுற்றி சுற்றி எல்லா மொழி படங்களிலும் நடித்து விடலாம். ஆனால் சல்மான் கானோ , பவன் கல்யாணோ வேறொரு மொழியில் நடித்து வெற்றி பெற முடியாது. ஆனால் ஒரு சில நடிகர்கள் அதையும் மீறி ஜெயித்திருக்கிறார்கள்.

மற்ற மொழி நடிகர்கள் தமிழில் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மம்மூட்டி . ஜெயராமை தவிர தமிழில் மற்ற நடிகர்களுக்கு அந்த அளவுக்கு கிரேஸ் இருந்ததில்லை. துல்கர் சல்மான், பிரித்விராஜ் வரிசையில் இந்த நடிகரும் தமிழுக்கு வந்தார். ஆனால் அவர்களை விட இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

கோலிவுட்டில் எப்படி சிம்புவுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போலவே இந்த நடிகருக்கும் கேரளாவில் அத்தனை ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தொடக்க காலங்களில் இவருக்கு இருந்த வரவேற்பு அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

கோலிவுட்டிற்கு நேரம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் தான் நிவின் பாலி. 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நஸ்ரியா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது நஸ்ரியாவுக்கும், நிவினுக்கும் ரசிகர்கள் கோலிவுட்டில் ரொம்ப அதிகம். 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார்.

இப்படி வெற்றி புகழோடு இருந்த நிவின் சமீபத்தில் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இதற்கு காரணமே அவருடைய உடல் எடை தான். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிவின் பாலியின் ரீசன்ட் புகைப்படத்தில் அவர் அதீத உடல் எடையுடன் காணப்பட்டார்.

எடை அதிகமானதால் நிவின் இப்போது பட வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறார். இப்போது இவர் நடித்த ஒரு சில படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அதை தவிர்த்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இப்போதைக்கு இல்லை.