அனிருத்துக்கு விட்டுக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வெளிவர உள்ள ஏஆர் ரகுமானின் 5 படங்கள்.. எகிறும் மார்க்கெட்

பல ரசிகர்களின் மனதை இசையமைப்பாளராகவும் வெல்ல முடியும் என்பதை ஏ ஆர் ரகுமானின் இசையால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். ஏனென்றால் காலங்காலமாக நடிகர் நடிகைகளுக்கு தான் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள். அதை உடைக்கும் விதமாக இசையின் நாயகனாக இருக்கும் ஏ ஆர் ரகுமானுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பது தான் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

அப்படிப்பட்ட இவர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என இவருடைய முத்திரையை பதித்து பிசியாக இருக்கிறார். இதற்கிடையில் இவருக்கு போட்டியாக கமுக்கமாக இருந்து இசையால் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறவர் தான் அனிருத். இவருடைய இசைக்கு மயங்காதவர்களும், ஆடாதவர்களும் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறார்.

அதனால் ஏ ஆர் ரகுமான் அந்தப் பக்கம் பிசியாக இருப்பதால் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை இவர் கைவசம் வைத்துக் கொண்டார். ஆனாலும் இவருடைய இசை மட்டும் தான் வேண்டும் என்று சில முன்னணி நடிகர்கள் இவரை கமிட் செய்து விட்டார்கள். அதனால் தற்போது ஏ ஆர் ரகுமான் ஐந்து படங்களுக்கு இசையமைக்கிறார்.

அதில் முதலாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருக்கிறார். அதுவும் முதல் முறையாக மாரி செல்வராஜ் கூட்டணியில் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கும் முதல் படம். இப்படம் இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசை அமைத்திருக்கிறார். இப்படம் இந்த வருடத்தின் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்ததாக ரஜினிகாந்த அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் லால் சலாம் படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருக்கிறார்.

இதனை அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்க இருக்கும் KM 234 படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அடுத்து தனுஷ் அவருடைய ஐம்பதாவது படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார். இப்படி தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைப்பதன் மூலம் இவருடைய மார்க்கெட் இன்னும் அதிகமாகவே எகிர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.