தசரா திரைப்படம் கமலின் இந்த படங்களின் கலவையா!.. வகையாய் மாட்டி கொண்ட நானி, கீர்த்தி

உலக நாயகன் கமலஹாசன் இந்திய சினிமா உலகிற்கே நடிப்பின் அகராதியாக இருக்கிறார். 60 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் கமல் பண்ணாத கேரக்டரங்களே இல்லை என சொல்லலாம். நடிகர்கள் வித்தியாசமான கேரக்டர்களை எடுத்து பண்ணினாலும் அதில் கண்டிப்பாக கமலின் சாயல் இருக்கும். அந்த அளவிற்கு நடிப்பில் பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார்.

ஏதாவது ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அதை அப்படியே பல மொழிகளிலும் ரீமேக் செய்வார்கள். சில நேரங்களில் வெற்றி பெற்ற கதைகளை அப்படியே சுட்டு யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் படத்தை எடுத்துக் கொண்டு மாட்டிக்கொள்வார்கள். அப்படி தற்போது மாட்டி இருப்பது தான் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா பட குழு.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீஸ் ஆன திரைப்படம் தசரா. இந்த படத்தில் நானே நிலக்கரி திருடி கொண்டு தன் பாட்டியுடன் வசித்து வரும் ஒரு முரட்டு இளைஞனாக நடித்திருப்பார். இதில் நாணியின் நடிப்பை முழுக்க முழுக்க கவனமாக பார்த்தால் விருமாண்டி படத்தில் கமலஹாசனின் நடிப்பை பார்த்தது போலவே இருக்கும்.

மேலும் அவர் அணிந்திருக்கும் உடை, ஹேர் ஸ்டைல் எல்லாம் பார்த்தால் நெடுஞ்சாலை படத்தின் ஆரியை நினைவூட்டும் விதமாக இருக்கும். அவருடைய நடிப்பு மற்றும் கதாபாத்திர அமைப்பு இரண்டுமே விருமாண்டி படம் கமலஹாசன் மற்றும் நெடுஞ்சாலை படம் ஆரியைப் போலவே இருக்கும். ஏற்கனவே நானியின் ஒரு சில படங்களில் அவருடைய நடிப்பை பார்க்கும் பொழுது கமலஹாசனை நினைவூட்டுவதாக சிம்மிமா விமர்சகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்ஷை காதலிக்கும் நானி, அவர் தன்னுடைய நண்பனை காதலிக்கிறார் என்று தெரிந்தவுடன் அந்த காதலை விட்டுக் கொடுத்து விடுவார். திருமணத்திற்குப் பிறகு நானியின் நண்பன் இறந்து விடவே கீர்த்தி சுரேஷ் நிறைய கஷ்டங்களை சந்திக்க நேரிடும். இதனால் கணவனை இழந்து விதவையாக இருக்கும் கீர்த்தியை நானி திருமணம் செய்து கொள்வார்.

கமலஹாசன் மற்றும் ராதிகா நடிப்பில் இதே போன்று ஒரு கதைக்களத்தில் சுவாதி முத்யம் என்னும் திரைப்படம் வெளியானது. கணவனை இழந்து பல சித்திரவதைகளுக்கு உள்ளாகும் ராதிகாவை கமலஹாசன் திருமணம் செய்து கொள்வார். விதவை மறுமணத்தை அந்த ஊரில் பல பேர் எதிர்த்தாலும் அவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து காட்டுவது போல் அந்த கதை அமைந்திருக்கும்.