லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே வேளையில் பிக்பாஸ் ஆறாவது சீசன் வார இறுதி நாட்களை தொகுத்து வழங்குவது, அரசியல் பணிகள் என கமல் எப்பவும் பிசியாக தான் இருக்கிறார்.
கமல் அரசியலுக்கு வந்ததும் சினிமாவை விட்டு ஒதுங்கிவிடுவார் என்று அனைவரும் நினைத்த போது விக்ரம் திரைப்படத்தில் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார். 10 வருடங்களுக்கு பிறகு கமலுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்தது. அந்த பாசிட்டிவ் எனர்ஜியிலேயே கமல் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். அடுத்தடுத்து படங்களிலும் ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார்.
இந்த லிஸ்டில் அஜித் பட இயக்குனர் ஹெச் வினோத்தும் இருக்கிறார். வினோத் ஏற்கனவே கமலுக்கு கதை சொல்லி அவரும் தலையசைத்து விட்டார். இருந்தாலும் கமல் வினோத்துக்கு ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். அதாவது வினோத் இப்போது இயக்கி கொண்டிருக்கும் துணிவு படம் வெற்றியடைந்தால் மட்டுமே கமல் படத்தை அவரால் இயக்க முடியும்.
கமல் இந்த கண்டிஷன் போட்டதுக்கும் காரணம் இருக்கிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெற்றி பெற்றிருந்தாலும் அது பிங்க் என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக். அடுத்து அவர் அஜித்தை வைத்து இயக்கிய வலிமை படம் பற்றி அனைவரும் அறிந்ததே. அஜித் ரசிகர்களால் மட்டும் தான் வலிமை வணிக ரீதியாக தப்பித்தது.
அஜித் மீண்டும் வினோத்துடன் பணியாற்றுவது அஜித் ரசிகர்களுக்கே முதலில் விருப்பம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது அஜித்தின் துணிவு திரைப்படத்துடன் விஜயின் வாரிசு திரைப்படம் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகிறது. விஜய் கடந்த இரண்டு வருடங்களாகவே 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறார். துணிவு பட ரிலீஸ் வினோத்துக்கு வாழ்வா, சாவா என்னும் கதை தான்.
கமல் ஏற்கனவே விக்ரம் வெற்றியை பார்த்துவிட்டதால் அடுத்து வெற்றிப்படம் கொடுக்கவே ஆசைப்படுவார். துணிவு ரிசல்ட் சொதப்பினால் கமல் அடுத்த படம் வினோத்துடன் பண்ணாமல் மணிரத்தினத்தின் பட வேலைகளை ஆரம்பித்து விடுவேன் என கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம். அஜித்தும் AK 62 க்கு ரெடியாகிவிடுவார். மொத்தத்தில் துணிவு ரிசல்ட் தான் வினோத்தின் சினிமா வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகிறது.