2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். வித்தியாசமான கதைக்களம் மற்றும் எளிய காட்சி அமைப்புகளால் தனித்துவம் பெற்ற இயக்குனராக அறியப்படுகிறார். இவர் இயக்கிய பிசாசு 2 படம் விரைவில் தியேட்டர் ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது.
மிஷ்கின் இயக்குனராக மட்டுமல்லாமல் இப்போது நடிப்பிலும் கலக்கி வருகிறார். 2010 ஆம் ஆண்டு நந்தலாலா என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு மிஷ்கின் வில்லனாக நடிக்க இருப்பதால் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
மாவீரனுக்கு அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தில் மிஷ்கின் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 7 வில்லன்கள் நடிக்க இருக்கும் கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்ட தளபதி 67ல் ஒரு வில்லனாக, தளபதி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மிஷ்கின் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தளபதி 67 படத்தின் வாய்ப்பை மறுத்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். தளபதிக்கு மிஷ்கின் நோ சொல்ல காரணம் நடிகர் விஜய்சேதுபதி தான். விஜய்சேதுபதி ஏற்கனவே சூப்பர் டீலக்சில் இணைந்து நடித்திருந்தார். இப்போது பிசாசு படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங்கின் போது மிஷ்கின் சேதுபதிக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார்.
இப்போது விஜய்சேதுபதி இந்த கதைக்கு ஓகே சொல்லிவிட்டாராம். எனவே மிஷ்கின் இந்த கதையில் முழு கவனத்தையும் செலுத்த திட்டமிட்டுள்ளதால் தளபதி 67 க்கு நோ சொல்லியிருக்கிறார். மிஷ்கின்-விஜய்சேதுபதி இணையும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் வேலைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க இருக்கிறது.