மணிரத்தனத்தின் பிரமாண்ட படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. இப்பவரைக்கும் திமிராகவே இருக்கும் பிரபலம்

மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எல்லோரது கனவாக இருக்கும். ஆனால் மணிரத்னம் தனது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒரு நடிகையை அழைத்தும் அவர் விடாப்படியாக மறுத்துள்ளார் என்பது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

எம்ஜிஆர், கமல் என பல பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயன்ற நிலையில் தற்போது மணிரத்தினம் லைக்கா உடன் கைகோர்த்து இப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் என பெரிய திரைபட்டாளுமே நடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் பிரமாண்டமாக நடந்து வருகிறது. வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி இந்திய திரைப்பட வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு கேட்டும் மறுத்துவிட்டார். ஆனால் மணிரத்னம் தாமாக முன்வந்து அமலாபாலிடம் இப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார்..

சில வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் காடவர் படத்தின் மூலம் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்துள்ள அமலா பால். கடந்த 2021 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மணிரத்தினம் இவரை அழைத்துள்ளார். ஆனால் அமலா பால் அப்போது இருந்த மனநிலையால் பொன்னின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தை தவறவிட்டதற்காக வருந்துகிறீர்களா என்று கேள்வி அமலாபாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அமலாபால் இப்ப வரைக்கும் அதை நினைத்து வருந்தவில்லை என கூறியுள்ளார். ஏனென்றால் சிலருக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும்.

அவ்வாறு சில விஷயங்கள் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொன்னியின் செல்வன் படத்தை தவற விட்டதை எண்ணி நான் வருத்தப்பட்டது இல்லை என அமலாபால் கூறியிருக்கிறார். அப்படி பொன்னியின் செல்வன் படத்தில் அமலாபால் நடித்து இருந்தால் எந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.