கார்த்தி விருமன், பொன்னியின் செல்வன் வெற்றி படங்களை தொடர்ந்து சர்தார் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ளது. மேலும் சர்தார் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சர்தார் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் அதே நாளில் வெளியாகிறது. ஆனால் இப்படம் ரிலீஸ் ஆவதில் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது படப்பிடிப்பின் போது கார்த்தி மற்றும் இயக்குனர் பி எஸ் மித்ரன் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்றது. மேலும் சர்தார் படத்திற்கு கிட்டத்தட்ட 800 மணி நேரம் அதாவது 33 நாட்கள் டப்பிங் நடைபெற்றுள்ளது. இதில் சில சமயங்களில் இயக்குனர் இல்லாத நேரத்தில் கார்த்தி டப்பிங் பேசியுள்ளார்.
இதனால் டைரக்டர் வந்ததும் இது சரி இல்லை, அது சரியில்லை என சொல்லி உள்ளாராம். இப்படி கார்த்தி, மித்ரன் இடையே பல பிரச்சினைகள் தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் சர்தார் படத்தில் சில குளறுபடிகள் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
சர்தார் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் இன்னும் வெளிநாட்டுகளுக்கு கன்டென்ட் அனுப்பவில்லையாம். ஆகையால் அங்கு சென்சார் பெற்று பின்பு தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். இதனால் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு சர்தார் படத்தின் ரிலீஸில் ஏகப்பட்ட சிக்கல்கள் நிறைந்துள்ளது. ஆனால் அதெல்லாம் ஒரு வழியாக சரி செய்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு ஒரு சரியான டஃப் கொடுக்கும் கார்த்தியின் சர்தார் படம் என அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.