பழிதீர்க்கும் வெறியோடு ரஜினி.. இணையத்தை மிரட்டும் நெல்சனின் ஜெயிலர் பட போஸ்டர்

சன் பிக்சர்ஸ், இன்று ட்விட்டரில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலரின் போஸ்டரை ட்வீட் செய்து, “#Jailer begins his action Today!” ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

மேலும் ஐஸ்வர்யா ராய் பச்சன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் மற்றும் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் ஜெயிலில் இருந்து தப்பிக்க முயலும் குற்றவாளியை ஜெயிலர் தடுப்பதாக இந்த கதை அமையும் என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த போஸ்டரில் ரஜினி சால்ட் & பெப்பர் லுக்கில் நடந்து வருவது போல் அமைந்துள்ளது. ரஜினியின் இந்த புதிய லுக்கை இணையதளத்தில் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jailer
jailer

பீஸ்ட் படத்தால் பல எதிர்மறை விமர்சனங்களை நெல்சன் சந்தித்து விட்டார். ரஜினிக்கும் அண்ணாத்தே ரசிகர்கள் எதிர்பார்த்த விதமாக அமையவில்லை. எனவே நெல்சன் மற்றும் ரஜினிக்கு இது மிகவும் முக்கியமான திரைப்படம்.