ஒரு வெற்றிப் படத்தில் ஒரு கூட்டணி அமைந்து விட்டால் அதை அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து எடுத்துச் செல்வது சமீபகாலமாக இருக்கும் இளம் இயக்குனர்களின் பழக்கமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தன்னுடைய படங்களில் ஒரு சில நடிகர்கள் கண்டிப்பாக நடித்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது வரை அடுத்த கட்டத்திற்கு நகராமல் அப்படியே தடுமாறி வருகிறது. அதற்கு காரணம் உலக நாயகனின் அரசியல் நுழைவு தான்.
இதனால் தற்போது விக்ரம் படம் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் ஆகியவற்றைத் தேர்வு செய்வதில் பிசியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அந்தவகையில் கைதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கிய நடிகர் நரேன் விக்ரம் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கைதி படத்தில் அவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது.

ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் கமலஹாசன் படத்தை இயக்க உள்ளதால் அதில் நரேனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கும் என்பது தெரியவில்லை. எப்போதுமே கமல் படங்களில் கமலை தவிர வேறு யாருக்குமே முக்கியத்துவம் இருக்காது என்பது தெரிந்த ஒன்றுதானே.