Kamal 234 : உலகநாயகன் கமலஹாசன் தற்போது சினிமாவில் முழு வீச்சாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற நடிகர்களின் படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர அவர் நடிக்கும் படங்களும் லயன் அப்பில் எக்கச்சக்கம் இருக்கிறது.
அந்த வகையில் மணிரத்தினத்துடன் ஒரு படத்தில் கமல் இணைய உள்ளார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான நாயகன் படம் இப்போதும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கிறது. ஆகையால் இவர்களது படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள அறிவிப்பு வெளியானது. இப்போது மணிரத்தினம், கமல் கூட்டணியில் உருவாக உள்ள உலக நாயகனின் 234 வது படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது கமலின் விக்ரம் படத்தை போல் இந்த படமும் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறது.
அதன்படி இந்த படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறாராம். அதுவும் அவரது ஐம்பதாவது படமாக கமல் 234 படம் இருக்க உள்ளது. பொதுவாக டாப் நடிகர்கள் சோலாவாக தான் தனது 50 படத்தில் நடித்து வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக சிம்பு ஆண்டவருடன் கூட்டணி போட இருக்கிறார்.
மேலும் இப்படத்தில் சிம்புக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மணிரத்தினம், கமல் காம்போ மீண்டும் இணைவதே ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்த நிலையில் இப்போது இந்த படத்தில் சிம்புவும் இணைந்துள்ளது கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என்பது போல் விருந்தாக அமைந்துள்ளது.
ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார். இப்போது மீண்டும் மணிரத்தினத்துடன் சிம்பு கூட்டணி போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.