மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கமல்? அடுத்த கட்டமாக 2 பெரிய புள்ளிகளுக்கு கொக்கி போட்ட பிக் பாஸ்

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியில் முக்கியமான ஒன்று பிக்பாஸ். ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த மாதம் தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். ஜி பி முத்து அவராகவே நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டார்.

பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோட்களை நடிகர் கமலஹாசன் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். பிக்பாஸுக்கு பிறகு நடிகர் கமலஹாசனின் பரிமாணம் இன்னுமே மக்களிடையே மாறியிருக்கிறது. வார நாள் எபிசோட்களை பார்க்காமல் விடும் நேயர்கள் கூட கமல் தொகுத்து வழங்கும் எபிசோடை தவறாமல் பார்த்து விடுவார்கள்.

நடிகர் கமலஹாசன் சமீபத்தில் ஹைதராபாத் சென்று இருந்தார். அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இயக்குனர் விஸ்வநாதனை சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய அவர் அன்றைய இரவு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வார இறுதி எபிசோடை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் நடிகர் கமலஹாசனின் உடல்நிலை தான். கமலஹாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை 2,3 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி இருக்கின்றனர்.

பொதுவாக இதற்கு முந்தைய சீசன்களில் கமலஹாசனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிக்பாஸ் வார இறுதி எபிசோடை தொகுத்து வழங்க முடியாமல் போகும் போது, நடிகை சுருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கியது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த வார எபிசோடை தொகுத்து வழங்க விஜய் டிவி சிம்பு, ரம்யா கிருஷ்ணனை அணுக இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த வார எபிசோடை கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என 200 சதவீதம் உறுதியாகி இருக்கிறது. அமுதவாணன், அசீம், தனலட்சுமி, கதிரவன், மணிகண்டா, ராம், ராபர்ட் ஆகியோர் நாமினேட் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.