Kamal Sridevi: இந்திய நடிகைகளில் பேரழகியாக இன்று வரை கொண்டாடப்படுபவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் மறைந்து இவ்வளவு வருடங்கள் ஆகியும் இன்றுவரை அவரை நிறைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் ஸ்ரீதேவியை சுற்றி நிறைய சர்ச்சைகளும் இருக்கின்றன. ஸ்ரீதேவி மறைவுக்குப் பிறகு உலகநாயகன் கமலஹாசன் சொன்ன விஷயம் கூட சர்ச்சையை தான் கிளப்பியது.
ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து வந்த காலத்தில் ஸ்ரீதேவி தான் அவர்களுடைய ஆஸ்தான கதாநாயகி. ஸ்ரீதேவி நடித்தாலே நம்ம படம் ஹிட் அடித்து விடும் என்று சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் கண்ணை மூடிக்கொண்டு நம்பி இருந்தார்கள். அந்த அளவுக்கு ராசியான நடிகையாக இருந்தார்.
ஸ்ரீதேவியை யார் திருமணம் செய்து கொள்வது என்று கமல் மற்றும் ரஜினிக்கு இடையே பெரிய போட்டியே இருந்தது என சொல்லப்பட்டது. ரஜினியுடன் ஒரு படம் நடித்து ரிலீஸ் ஆன ரஜினி மற்றும் ஸ்ரீதேவி காதலிக்கிறார்கள் என்று செய்தி வெளியாகும். கமலுடன் நடித்து ஒரு படம் ரிலீஸ் ஆனது கமல் மற்றும் ஸ்ரீதேவி காதலிக்கிறார்கள் என வதந்தி கிளம்பும்.
கமல் மற்றும் ஸ்ரீதேவி ஜோடி
இதில் கமல் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் காதலித்து வருகிறார்கள், விரைவில் இருவருக்கும் திருமணம் ஆகப்போகிறது என்று செய்திகள் அடிக்கடி வெளியாகும். இவர்கள் இருவருடைய திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதித்து விட்டதாக கூட சில நேரங்களில் பத்திரிகைகளில் செய்திகள் வரும். இப்போ கல்யாணம், அப்போ கல்யாணம் என இஷ்டத்திற்கு மீடியாக்களே தேதியும் குறித்து கொண்டிருந்தது.
ஸ்ரீதேவி பாலிவுட் சென்று திருமணம் செய்யும் வரை இந்த வதந்தி எழுந்து வந்தது. ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு கமலிடம் இந்த வதந்தி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல் எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையேயான உறவு அண்ணன் தங்கை உறவை போன்றது. ஆனால் சினிமாவுக்கு இந்த கதையெல்லாம் ஒத்து வராது.
நாங்கள் இருவரும் காதலர்கள் போல் காட்டிக் கொண்டால்தான் எங்கள் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால் தான் எங்களை சுற்றி இருக்கும் வதந்திகளை அப்படியே விட்டு விட்டோம். எல்லாமே சினிமா வியாபாரம்தான். மற்றபடி இருவரும் உண்மையான அண்ணன் தங்கை போல் தான் நாங்கள் பழகினோம் என்று சொல்லி இருக்கிறார்.