மயில்சாமி 100 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவருடைய மிகப்பெரிய குணமே அனைவரிடமும் சகஜமாக பழகுவது. அந்த வகையில் அனைவருக்கும் பிடித்த மனிதராக இருந்தவர் தான் மயில்சாமி. அப்படிப்பட்ட இவரின் இறப்பு பலரின் மனதில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவரின் இறப்பிற்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவர் இறந்ததற்கு ஒரு சில கதாநாயகர்கள் மட்டுமே நேரில் வந்தனர். ஆனால் முக்கியமாக மயில்சாமியை பார்ப்பதற்கு கமல் வரவில்லை. நேற்று கமலுக்கு எந்த படப்பிடிப்பு வேலையும் இல்லாமல் தான் இருந்திருக்கிறார். ஆனாலும் இவர் மயில்சாமியின் இறப்பிற்கு போகாமல் இருந்தது மிகவும் வருத்தமானது.
கமல் படங்களில் ஒரு சில படங்களில் மூலம் மயில்சாமி இவருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். எந்த மாதிரியான நட்பு வட்டாரம் என்றால் மயில்சாமி வீட்டில் மீன் குழம்பு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு கமல் அவரிடம் பழகியவர். பின்னர் மயில்சாமியின் குடும்பத்தின் ஒருவராகவே கமல் மாறிவிட்டார்.
இப்படி இருக்க மயில்சாமியின் இறப்பை தெரிந்து கொண்ட பின்னரும் அவரை நேரில் பார்க்காமல் இருந்தது பல கேள்விகளை எழுப்பி வருகிறது. இந்நிலையில் இவரது நெருங்கிய நண்பராக இருக்கும் ரஜினி நேற்று நேரில் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வந்தார். அதிலும் விஜய் சேதுபதி, சித்தார்த், கார்த்தி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் அனைவரும் நேரில் சென்று அவர்களின் இரங்கலை தெரிவித்து வந்தனர். ஆனால் கமல் நேற்று போகாதது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
என்னதான் அவர்கள் பிசியாக இருந்தாலும் ஒரு துக்கத்திற்கு கூட செல்லாமல் இருப்பது மிகவும் வருத்தத்தை தெரிவிக்கிறது. அதிலும் சில நடிகர்கள் மயில்சாமியுடன் நடித்தவர்கள் கூட இந்த மாதிரி இருப்பது ஏன் என்று பல கேள்விகளை எழுப்புகிறது. இவர் ஒரு நடிகர் என்றதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட இவருக்கு ஆசைப்பட்ட மாதிரி சில விஷயங்கள் நடந்திருக்கிறது என்பது மிகவும் ஆறுதலாக இருக்கிறது. அதாவது இவர் பக்தியில் சிவனின் அடியனாக இருப்பவர். அப்படிப்பட்ட இவருக்கு சிவராத்திரி அன்று மோட்சம் கிடைத்திருக்கிறது என்பது இவர் செய்த புண்ணியம் என்று சொல்லலாம்.