சிம்புவால் கமலுக்கு ஏற்பட்ட தலைவலி.. தேரை இழுத்து தெருவில் விட்ட கதையா ஆயிடுச்சு!

உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கமல் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாக இருந்த படத்தில் தற்பொழுது ஒரு பிரச்சனை ஏற்பட்டதால் அதை எவ்வாறு சரி செய்வது அறியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறார் கமல்.

சிம்பு தன்னுடைய உடல் மாற்றத்திற்கு பிறகு நடித்து வரும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதன் காரணமாக தயாரிப்பாளர்கள் இவரை தன் படங்களில் நடிக்க புக் செய்து வந்தனர். இதே எண்ணத்தில் கமலும் இருந்துள்ளார்.

மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமலின் தயாரிப்பில் சிம்புவின் 48வது படத்தை உருவாக்க இருந்த நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் ஒன்றும் செய்வது புரியாமல் இருந்து வருகிறார். இதற்கு காரணமாக பார்க்கையில்,கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் தான் கொரோனா குமார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஆர்வம் காட்டாத சிம்பு தற்பொழுது லண்டனுக்கு சென்று விட்டதால் இதை குறித்து ஐசரி கே கணேசன் மற்றும் வேறு தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இப்படத்தை முடித்துக் கொடுத்தால் மட்டுமே கமல் படத்தில் நடிக்க முடியும்.

அவ்வாறு இல்லை என்றால் இந்தப் பிரச்சினையை வேற மாதிரி கொண்டு சென்று மறுபடியும் சிம்புவை தலை தூக்க முடியாமல் செய்து விடுவோம். ஏற்கனவே ஏமாற்றியது போல இந்த முறையும் ஏமாற்ற முடியாது என்று செக் வைத்துள்ளனர். இந்த மாதம் இறுதியில் எஸ் டி ஆர் 48 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் இது போன்ற சம்பவம் அதிருப்தியை அளித்து வருகிறது.

மேலும் இதைப்பற்றி எதுவும் கவலைப்படாமல் சிம்பு அவரது வேலையை லண்டனில் அழகாக செய்து வருகிறார். அவர் திரும்பிய பின்பு தான் இதனின் கச்சேரி ஆரம்பம் ஆகும் போல என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தகைய செயல் கமல் சிம்பு மீது கொண்ட நம்பிக்கையை உடைக்கும் விதமாக இருந்து வருகிறது.