Kaithi 2 – Actor Karthi: தமிழ் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இரண்டாம் பாகம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்க்கு லியோ படத்தை கொடுத்த பிறகு கூட, இன்று வரை அவர் மேடை ஏறும் பொழுது கைதி 2 எப்போது வெளியாகும் என்றுதான் முக்கால்வாசி பேரின் கேள்வியாக இருக்கிறது.
நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். கார்த்தி பொன்னியின் செல்வன் நடித்த பிறகு கைதி படத்தின் இரண்டாவது பாகத்தின் வேலைகள் ஆரம்பிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கார்த்தியும் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் மேடைகளில் கைதி 2 விரைவில் வரும் என சொல்லி இருந்தார்.
ஆனால் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் கதை தயாரிப்பில் பிசியாகி விடுவார் என தெரிகிறது. இனி கைதி படத்தின் இரண்டாம் பாகம் என்பது ஒரு சில வருடங்கள் கழித்து வெளிவர வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன்பே கார்த்தி நடித்த மற்றொரு வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன.
இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்து கடந்த தீபாவளியன்று ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் தான் சர்தார். இந்த படம் கிட்டத்தட்ட 80 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருந்தார்கள்.
இப்போது இயக்குனர் மித்ரன் இரண்டாம் பாகத்தின் வேலைகளை தொடங்கி விட்டதாக அப்டேட் வெளியாகி இருக்கிறது. மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். மீண்டும் கார்த்தி- யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் படம் வெளிவர இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட் ஆக வந்திருக்கிறது.
இந்த இரண்டாம் பாகத்திற்கு மேலும் ஹைப் ஏற்றும் விதமாக படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கார்த்தி ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் திரையில் தோன்றினால் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும். விஜய் சேதுபதியை பொருத்தவரைக்கும் தற்போது அவர் அடுத்தடுத்து நெகட்டிவ் ரோல்களில் அதிகமாக ஒப்பந்தமாகி வருகிறார்.