Actor Kamalhaasan- KH233: சதுரங்க வேட்டை என்னும் வெற்றி படத்தை அடுத்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்தடுத்து நடிகர் அஜித்குமார் உடன் மூன்று படங்களில் இணைந்தார். துணிவு திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு அடுத்து யோகி பாபு உடன் ஒரு படம் பண்ண இருப்பதாகவும் ஹெச்.வினோத் அதிகாரப்பூர்வமாக சொல்லி இருந்தார். அதே நேரத்தில் கமலஹாசனுடன் படம் பண்ண வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில் உலக நாயகன் கமலஹாசன் 32 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைய இருப்பதாகவும் அது அவருடைய 234 ஆவது படம் எனவும் தகவல்கள் வெளியாகின. ஹெச்.வினோத் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று எந்த அப்டேட்டுகளும் வெளியாகாத நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு கமல் மற்றும் ஹெச்.வினோத் ஒன்றாக இருப்பது போல் நிறைய புகைப்படங்கள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய 233 ஆவது படம் மூலம் இயக்குனர் வினோத்துடன் இணைவது உறுதியாகியிருக்கிறது. இது பற்றிய செய்திகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல் ஆகி கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தை பற்றி அடுத்தடுத்து ஐந்து விஷயங்கள் அதிரடி அப்டேட் ஆக உறுதியாகி இருக்கின்றன.
எப்போதுமே அதிரடி மற்றும் சஸ்பென்ஸ் கதைகளை இயக்கும் இயக்குனர் வினோத் இந்த முறை முழுக்க முழுக்க விவசாயம் பற்றி இந்த படத்தை எடுக்க இருக்கிறாராம் . அதனால் தான் கமல் மற்றும் வினோத் இருக்கும் புகைப்படங்களில் விவசாயிகளும் இருக்கிறார்கள். விவசாயத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் கமலின் அடுத்த படம் இருக்கப் போகிறது. மேலும் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த கையோடு இந்த படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கிறது.
இந்த படத்தில் வில்லன் ரோலில் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே கமலுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த கூட்டணியும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பேசப்பட்டது. வினோத் இயக்கத்தில், கமலஹாசன் நடிப்பில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் அதிக வரவேற்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
KH233 படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார். உலக நாயகன் கமலஹாசனுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசையமைத்து பல ஹிட்களை கொடுத்திருக்கிறார். அதே கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.