விஜய்க்காக தன்னோட ஸ்டைலையே மாற்றிய லோகேஷ்.. இதுவரை செய்யாத பெரிய சம்பவமா இருக்குமோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், பிக் பாஸ் ஜனனி, மிஸ்கின் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தான் லியோ. விஜய்யும், லோகேஷ் கனகராஜும் மாஸ்டர் படத்திற்கு பின்பு இணைந்துள்ள இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ள நிலையில், காஷ்மீரில் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அண்மையில் நடந்து முடிந்தது.

அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில், நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார். லியோ படத்தை வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதத்திற்குள் இப்படத்தின் ஷூட்டிங்கை முழுமையாக முடிக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷின் முந்தைய திரைப்படங்களாக கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் உள்ள ஒரு விஷயத்தை நடிகர் விஜய்யின் கோரிக்கையால் லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் தற்போது மாற்றி உள்ளார். பொதுவாக ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. உதாரணமாக சில இயக்குனர்கள் தங்களது படங்களை பிரம்மாண்டமான பொருட்செலவிலும், சில இயக்குனர்கள் கம்மியான பட்ஜெட்டிலும் எடுப்பர்.

அதிலும் சில இயக்குனர்கள் வெயில் காலம், மழைக்காலம், குளிர் காலம், கடல், மலை உள்ளிட்டவற்றை தன் படங்களில் காட்சிப்படுத்தும் வகையில் திரைப்படங்களை இயக்குவர். அப்படித்தான் லோகேஷ் கனகராஜின் படங்களில் இரவு காட்சிகள் அதிகமாக இடம்பெறும். கார்த்தி நடித்த கைதி படம் முழுக்க முழுக்க ஒரு இரவில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்தே லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பார். அதேபோல் கமலின் விக்ரம் படத்தில் பெரும்பாலான முக்கிய காட்சிகள் இரவில் எடுக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் லியோ படத்தையும் லோகேஷ் கனகராஜ் இரவில் பல காட்சிகளை பிளான் பண்ணி இயக்கி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென நடிகர் விஜய், பகலில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்குமாறு கூறியுள்ளார். இதற்கு காரணமாக தன் ரசிகர்களுக்கு தனது படத்தை இரவு காட்சிகளில் பார்க்க செட்டாகாது என கூறியுள்ளார்.

விஜய்யின் இந்த கோரிக்கையை மறுக்கமுடியாத லோகேஷ் கனகராஜ், தற்போது லியோ படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்துள்ளாராம். மேலும் இப்படத்தின் குறைவான இரவு காட்சிகளே இடம்பெறவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனிடையே லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் விஜய்யின் தலையீடு மிகப்பெரிய அளவில் உள்ளதால், லியோ படம் லோகேஷ் கனகராஜின் படமாக இருந்தால் மட்டுமே ஹிட்டாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.