மாறன் குடும்பத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடைசியாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை தயாரித்தனர். இந்த படம் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பின்னர் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் பக்காவாக பிளான் செய்து இருக்கிறார்கள். தற்போது இவர்களிடம் தனுஷ் மற்றும் விஜய் என முன்னணி ஹீரோக்களின் படங்கள் லாக் ஆகி இருக்கிறது.
பாலிவுட் படமான தி கிரே மேன் ரிலீசுக்கு பிறகு நடிகர் தனுஷ் இப்பொழுது வாத்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் பிறகு தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் இயக்கி நடிக்க இருக்கிறார்.
யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் திரைப்படங்களுக்கு பிறகு தனுஷ் மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் இணைகிறார். மேலும் பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். மிகப்பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி. தனுஷ் படங்களிலேயே இந்த படத்தின் பட்ஜெட் தான் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கக்கூடும். இதில் தனுஷுக்கு சம்பளம் மட்டுமே 35 கோடி.
அதேபோல் நடிகர் விஜய்யின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பு தளபதி 67 க்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் தனுஷின் 50 ஆவது படத்தை தயாரித்து முடித்த பின் விஜய் படத்திற்கான வேலைகள் தொடங்கும். விஜய்யின் இந்த படத்திற்கான பட்ஜெட் 400 கோடி ஆகும்.
இப்படி தனுஷ் படத்திற்கு 100 கோடி, விஜய் படத்திற்கு நானூறு கோடி என பக்கவாக பிளான் போட்டு வைத்திருக்கிறார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர். கலாநிதி மாறன் போடும் இந்த கணக்கு வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விரைவில் தனுஷ் படத்தின் அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.