Vijay Tv Mahanadhi Serial Actress: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. பொதுவாக சன் டிவி சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அதில் விளம்பரம் போடும் பொழுது விஜய் டிவியில் உள்ள நாடகத்தையும், இதில் விளம்பரம் போடும்போது சன் டிவியில் உள்ள நாடகத்தையும் மாற்றி மாற்றி பார்க்கும் அளவிற்கு சீரியலுக்கு மக்கள் அடிக்ட் ஆகிவிட்டார்கள்.
அதனாலயே ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு புது புது நாடகத்தை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் வெளிவந்த மகாநதி சீரியல் மக்களின் ஃபேவரிட் நாடகமாக மாறிவிட்டது. முக்கியமாக விஜய் மற்றும் காவிரி கதாபாத்திரங்கள் அவர்களை கவர்ந்து விட்டது. அந்த வகையில் காவிரி கதாபாத்திரத்தில் நடித்துவரும் லட்சுமி பிரியா மக்களின் பேவரிட் நடிகையாகவும் மாறிவிட்டார்.
இவர் சீரியலுக்கு அறிமுகமானதுமே அதிகமான ரசிகர்களை வென்று விட்டார். ஆனால் இதில் வருவதற்கு முன் முதலில் மாடலிங்கில் ஆர்வம் காட்டி வந்தார். அதனால் மிஸ் மிராக்கி 2018 என்னும் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்றார். அடுத்ததாக சில பத்திரிகைகளில் அட்டை படத்தில் இடம்பெறுகிற மாதிரி அடிக்கடி போட்டோ சூட் நடத்தி வந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த பன்னிக்குட்டி திரைப்படம். இதில் அறிமுகமாகிய லட்சுமி பிரியா என்கிற காவிரி, காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக அவருடைய கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இந்த சமயத்தில் தான் இவருக்கு மகாநதி சீரியலில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதற்கு இடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், இவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு 40 ஆயிரத்திற்கும் மேல் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். மேலும் யோகி பாபுவின் பன்னிக்குட்டி படத்தை தொடர்ந்து த்ரிஷாவின் ரோடு, சிம்புவின் பத்து தல, ட்ரிப் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இப்படி சில வாய்ப்புகளை பயன்படுத்தி சின்னத்திரை மற்றும் பெரிய திரையிலையும் ஜொலித்து வருகிறார்.