மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உருவாகியிருந்தது. இப்படத்தில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகளை மணிரத்தினம் தேர்வு செய்து இருந்தார்.
சோழர் ராம்ராஜ்ஜியத்தை அப்படியே கண்முன் காட்டி இருந்தார். இப்படத்தை மணிரத்னம் லைக்கா ப்ரொடக்ஷன் உடன் கைகோர்த்து தயாரித்திருந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வெளியாகி கிட்டதட்ட ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் திரையரங்குகள் ஹவுஸ் புல்லாக உள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகத்தில் ஏகப்பட்ட டுவிஸ்ட் இருப்பதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
அடுத்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக முன்பே அறிவிப்பு வெளியானது. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதற்கான பிரமோஷன் வேலைகள் பிப்ரவரி மாதமே தொடங்க உள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படம் முதல் பாகம் வெளியாகும் போது எல்லா நாடுகளுக்கும் சென்று படக்குழு பிரமோஷன் செய்திருந்தது. அதேபோல் அனைத்து மொழிகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்நிலையில் தற்போதும் வசூலில் நல்ல வேட்டையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. தபொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதியை கேட்ட ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் உள்ள பல முடிச்சுகள் இந்த பாகத்தில் அவிழ்க்கப்படும்.