இமானுக்கு பட வாய்ப்பு இல்லை என பச்ச பொய் சொன்ன எக்ஸ் மனைவி.. அடுத்தடுத்து இசையமைக்கும் 5 படங்கள்

D Imman Upcoming Projects: கடந்த மூன்று வாரமாக சமூக வலைத்தளம் பக்கம் முழுவதும் இசையமைப்பாளர் இமானை பற்றி தான் பேச்சு. இவர் இசையமைத்து இந்த அளவுக்கு வைரல் ஆனாரோ இல்லையோ ஒரே ஒரு பேட்டியால் உலக அளவில் ரீச் ஆகிவிட்டார். ஏனென்றால் அந்த பேட்டியில் அவர் சொன்ன விஷயம் அப்படி. சம்பந்தப்பட்ட பிரபலமும் இந்த வைரல் ரீச்சுக்கு மிகப்பெரிய காரணம்.

சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அதை நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று சொல்லி இமான் முடித்துக் கொண்டார். இதற்கு பின்னணியில் பல விஷயங்கள் பேசப்பட்டது. அவையெல்லாம் உண்மை என்று சொல்லும்படி இமான் முன்னாள் மனைவி வாண்டடாக வந்து அவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் இப்படி பேசுகிறார் என்று ஒரே போடாக போட்டார்.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற ஒரு பழமொழி உண்டு. இமான் எக்ஸ் மனைவி மோனிகா வாயை மூடிக்கொண்டு இருந்தால் கூட இது இவ்வளவு பெரிய சர்ச்சையாக இருக்காது. சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்ற பெயரில் பேசி மாட்டிக்கொண்டு முழிக்கிறார். உண்மையில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன எதற்கும் துணிந்தவன், கழுவேர்த்தி மூர்க்கன் வரைக்கும் இமான் இசையமைத்து இருக்கிறார்.

இப்போதைக்கு அவர் கைவசம் பெரிய ஹீரோக்களின் படங்கள் தான் இல்லை. மற்றபடி அடுத்த ஐந்து படங்களில் இசை அமைக்க இருக்கிறார். இந்த சர்ச்சை பெரிதாக பேசப்பட்டு வந்த ஒரு சில நாட்களிலேயே இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தன்னுடைய அடுத்த படத்திற்கு இமான் தான் இசையமைக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றுக்கும் இமான் இசையமைக்கிறார். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர். இவர்கள் இருவரும் இணைந்து மைனா, கும்கி, கயல் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். கும்கி படத்தின் பாடல்கள் இன்று வரை அனைவரது ஃபேவரைட் ஆகவும் இருக்கிறது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஏற்கனவே பாண்டியநாடு மற்றும் ஜீவா போன்ற படங்களில் இமான் இசையமைத்து இருக்கிறார். தற்போது அவருடைய புதிய படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். இயக்குனர் விக்ரம் ராஜேஷ் தாஸ் படத்திலும் பணியாற்ற இருக்கிறார். இது மட்டுமில்லாமல் இமானுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.