ஆசானுக்கு சல்யூட் அடித்த ஆஸ்கார் நாயகன்.. உயிரை பணையம் வைத்து செய்த காரியம்

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு தனது இசை பயணத்தை தொடங்கிய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அதன் பிறகு ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களையும் இசையமைத்து உயரிய விருதுகள் ஆன ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல விருதுகளை சொந்தம் ஆக்கியவர்.

இவர் இசையமைத்த முதல் படத்தில் இருந்து இப்போது வரை 30 ஆண்டுகளாக ஆசானாக இருப்பவர் இயக்குனர் மணிரத்தினம் என நெகிழ்ந்து பேசியிருக்கிறார். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு அந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான், ‘சாதாரண மனிதரிடம் இருந்து எப்படி அவர்களுடைய டேலண்டை வெளியே எடுப்பது என்பதை 30 வருடங்களாக எனக்கு பாஸாக இருக்கும் மணிரத்னம் அவர்களிடமிருந்து இருந்து கற்றுக்கொண்டேன்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. இது நம்ம படம், இந்தியவின் படம். இந்த படத்திற்கு இசை அமைக்க ஆரம்பித்தவுடனேயே ஆராய்ச்சிக்காக பல இடங்களில் சென்று, இரண்டு வாரத்திற்கு மேல் தங்கி, அங்கிருக்கும் இன்ஸ்ட்ருமென்ட் கோவில்களை பார்த்ததை வைத்தே இசை அமைத்தோம்.

மேலும் இந்தப் படம் எடுக்கும்போது கொரோனா லாக் டவுன். ஆனால் அதை எல்லாம் பார்க்காமல் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்தை உயிரை பணையம் வைத்து படத்தை உருவாக்கிய எல்லோருக்கும் சல்யூட்’ என்று இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இவருடன் நடிகர் கார்த்தி டீசர் வெளியீட்டு விழாவில், ‘வரலாற்றைத் தெரிந்து கொள்வது முக்கியம். தமிழன் என்று கூறிக்கொள்கிறோம். அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்டால் பதில் இல்லை. அதைத் தெரிந்து கொள்வது அவசியம்’ என்று பொன்னியின் செல்வன் படத்தை குறித்து பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.

மேலும் கார்த்தி தொடர்ந்து திரிஷா, ‘மணிரத்னத்தின் கனவு படத்தில் நடித்தது மகிழ்ச்சி. 30 பேர் சேர்ந்து நடித்திருக்கும் மல்டி ஸ்டார் படத்தில் நடிப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார். இவரைத் தொடர்ந்து ஜெயம் ரவி, ‘இதைவிட தன் வாழ்வில் மிக சிறந்த விஷயம் எதுவும் நடத்துவதே இல்லை. பொன்னியின் செல்வனை நம் படம் என சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.