ஆதிபுருஷ் 2ம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கா.. பிரபாஸின் பதில் என்ன தெரியுமா?

Any Chance For Adipurush 2nd Part: பிரபாஸ் பாகுபலி 2 படத்திற்குப் பிறகு ஒரு வெற்றி படம் கொடுக்க முடியால் திணறி வருகிறார். சாகோ மற்றும் ராதே ஷ்யாம் அடுத்தடுத்த தோல்வியால் துவண்டு போன பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். ராமாயணத்தின் கதையை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. ஓம் ராவத் இப்படத்தை இயக்கி இருந்தார்.

மேலும் ஆதிபுருஷ் படத்தில் கீர்த்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் பிரமாண்டமாக கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதுமட்டுமின்றி திரையரங்குகளில் அனுமாருக்கு ஒரு சீட் விடப்பட்டிருந்தது.

ஆனால் முதல் இரண்டு நாட்களில் ஓரளவு நல்ல வசூலை பெற்ற ஆதிபுருஷ் மூன்றாவது நாளிலிருந்து குறைந்த வசூல் மட்டுமே செய்திருந்தது. இதனால் போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் தயாரிப்பாளர் மிகுந்த கலக்கத்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி பிரபலங்கள் பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பாகுபலி படத்தில் கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்பதை ஆதிபுருஷ் படத்தின் மூலம் தெரிந்து கொண்டதாக நக்கலாக பதிவிட்டு இருந்தார். இவ்வாறு பான் இந்திய ஸ்டார் பிரபாஸின் படம் இணையத்தில் மிகப்பெரிய ட்ரோல் ஆனது.

இப்போது ஆதிபுருஷ் 2 படம் வருமா என்பதற்கு பிரபாஸ் பதிலளித்துள்ளார். அதாவது இயக்குனர் ஓம் ரவாத் மற்றும் அவரது குழுவினர் ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வலியுறுத்தியதாகவும் அதற்கு திட்டவட்டமாக பிரபாஸ் மறுத்துவிட்டாராம். ஏற்கனவே முதல் பாகத்தில் பெயர் ரொம்ப டேமேஜ் ஆனதால் இனி உங்க சங்கார்த்தமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.

இப்போது பிரபாஸின் நடிப்பில் சலார் படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன், அமிதாப் பச்சன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.