ஐஸ்வர்யா ராஜேஷை ஓரங்கட்ட வரும் ப்ரியா பவானி சங்கர்.. கைவசம் அதிக படங்களால் இரு மடங்காக உயர்ந்த சம்பளம்

திரையுலகில் கஷ்டப்பட்டு முன்னேறி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு படங்களில் அதிக கிளாமராக நடித்து வருவது சிறு சர்ச்சையை கிளப்பினாலும் அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் அவர் தமிழ் திரைப்படங்களில் நடித்தாலும் தெலுங்கு பக்கம் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அங்கு அதிகபட்ச சம்பளம் கிடைப்பதுதான். அதனாலையே தற்போது தமிழில் அவருடைய இடத்தை மெல்ல மெல்ல பிரியா பவானி சங்கர் தட்டிப் பறித்துள்ளார். தமிழில் தற்போது இவர் இந்தியன் 2, பொம்மை, பத்து தல உள்ளிட்ட ஏகப்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

மேலும் இப்போது அவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு பக்கமும் கால் பதித்துள்ளார். அந்த வகையில் பிரபல நடிகர் சத்யதேவ் நடிக்கும் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் அவருக்கு எதிர்பார்க்காத அளவு எக்கசக்கமாக சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

அதாவது அவர் இரண்டு தமிழ் படங்களில் நடித்து வாங்கும் சம்பளத்தை தெலுங்கில் ஒரே படத்தின் மூலம் வாங்குகிறாராம். அந்த அளவுக்கு அவருடைய சம்பளம் மட்டுமல்ல இமேஜும் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பல தெலுங்கு இயக்குனர்களிடம் தற்போது கதைகளை கேட்டு வரும் பிரியா பவானி சங்கர் சில கதைகளை ஓகே செய்தும் வைத்திருக்கிறார்.

விரைவில் அதற்கான ஒப்பந்தமும் போடப்பட இருக்கிறது. இதனால் தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கும் அவர் தெலுங்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளார். சின்னத்திரையில் இருந்து வந்திருக்கும் இந்த இரண்டு நடிகைகளுக்கு இடையே இருக்கும் போட்டி தான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷை விட பிரியா பவானி சங்கருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் அவருடைய அமைதியான அணுகுமுறையும், மரியாதையான குணமும் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்து வருகிறது. இதனால் விரைவில் ஐஸ்வர்யா ராஜேஷை பின்னுக்கு தள்ளி பிரியா பவானி சங்கர் தனக்கான இடத்தை பிடிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.