1. Home
  2. கோலிவுட்

கமல், பாக்கியராஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. வசமாக சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்

கமல், பாக்கியராஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. வசமாக சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்
கமலின் விஸ்வரூபம் போல அமரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் சந்திக்கும் பிரச்சனைகள்

Problems facing Sivakarthikeyan for Amaran like kamal's vishwaroopam: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஆளுமை, நெபோட்டிஸம் இவை எல்லாவற்றையும் கடந்து தன் திறமை மற்றும் தனித்துவமான கதை தேர்வின் மூலம் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கி  தன் வெற்றியின் மூலம் கெத்து காண்பித்து வருபவர் சிவகார்த்திகேயன்.

உலக நாயகன் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கி வருகின்ற அமரன் படத்தின் டீசர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்டது. ஒன்றரை நிமிஷ டீசரில் ஓராயிரம் ஓட்டைகள் கண்டுபிடித்து அதை வைத்து அரசியல் பண்ண ஆரம்பித்துள்ளனர் சில நல்ல உள்ளங்கள்.

யூட்யூபில் வெளிவந்த அமரன் டீசர் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்க படத்தை வெளியிட்டால் பிரச்சனை வரும் என்று ஆருடம் கூறி அதை தடை செய்ய பல இடங்களிலும் பல்வேறு செயல்கள் அரங்கேறி வருகிறது. அதில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் பேசியது தப்பு என்றும் ஆர்ப்பாட்டங்கள் கிளம்பியுள்ளது.

இதற்குமுன் விஸ்வரூபம் படத்தில் கமல் ஒரு மதத்தினரை தீவிரவாதியாக காட்டுகிறார் என்று சர்ச்சை வடித்தது. ஆனால் படத்தில் கமலுமே அதே மதத்தின் கேரக்டராக நடித்திருந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தினராக காட்டிக்கொண்டு அதேசமயம் தீவிரவாதத்திற்கும் எதிராக விஸ்வரூபம் எடுத்தார் என்பது நாடறிந்த கதை.

அதேபோல் இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் பிராமணர்களை இரு வேறு கோணங்களில் காட்டி அவர்களின் எதிர்ப்பை காட்ட முற்படும்போது, இயக்கம் என்று வேறொரு பெயரை காட்டி நைசாக எஸ்கேப் ஆகியிருந்தார் பாக்யராஜ். சமூக அக்கறை உள்ள படம் தான் என்றாலும் பிரச்சனைகளை சந்திக்க விருப்பமில்லாமல் கமல், பாக்கியராஜ் இருவருமே பலே தில்லாடிலங்கடி வேலைகளை செய்துள்ளனர்.

இவர்களோடு ஒப்பிடும்போது இயக்குனர் சொல்வதை செய்து விட்டு  சிவனே இருக்கும் அந்த சிவகார்த்திகேயன் எவ்வளவோ மேல் தான். "அச்சமில்லை அச்சமில்லை" என்ற ஆரம்பித்த அமரனின் காவியம் தடைகளை தாண்டி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.