ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்காமல் ரஜினி நடித்துக் கொடுத்த படம்.. வெளிவந்த உண்மை காரணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார். அதுமட்டுமின்றி கோலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுள் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆனால் சில படங்களின் தோல்வியால் அவரது சம்பளம் தற்போது சரியா தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. இதைத்தொடர்ந்த தலைவர் 170 படத்தை சிவகார்த்திகேயனின் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.

மேலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் லைக்கா இப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளாராம். சமீபத்தில் அந்த படத்தின் இயக்குனர் இந்த விஷயத்தை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளார்.

அதாவது 1997 ஆம் ஆண்டு இந்த விஷயம் நடந்தேறி உள்ளது. அதாவது நடன இயக்குனர் ரகுராம் இயக்கத்தில் பெங்கால் மொழியில் வெளியான பாக்யா டெபாடா என்ற படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் ஆக்சன் படமாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் கதையைக் கேட்டு ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

இதனால் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை பல வருடங்கள் கழித்து ஒரு பேட்டியில் ரகுராம் மாஸ்டர் பகிர்ந்து கொண்டார். மேலும் அதன் பின்பு ஹிந்தி போன்ற பல மொழிகளில் இப்படம் வெளியாகி இருந்தாம்.

இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் நடிகராக இருந்தாலும் 90 காலகட்டத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் ஒரு படத்தில் நடித்தது பெரிய விஷயம் தான் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அங்க நிக்கிறாரு தலைவர் அவரது ரசிகர்கள் பெருமைப்படுகின்றனர்.