48 ஆண்டு திரைவாழ்க்கையில், ரஜினி பார்த்து மிரண்டு போன 2 வில்லன்கள்.. அவரே சொன்ன பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த அதன்பிறகுதான் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். அதுவும் 16 வயதினிலே படத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு வில்லனாக பரட்டை என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் ஸ்டைலும், நடிப்பும் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O படத்திலும் வில்லனாக ரஜினி மிரட்டியிருப்பார். ரஜினி திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அவரின் சினிமா வாழ்க்கையிலேயே பிடித்த இரண்டு வில்லனுக்கும் பற்றி அவரே கூறியுள்ளார்.

அதாவது ரஜினியின் கேரியரில் மைல்கல்லாக அமைந்த படம் பாட்ஷா. இப்படத்தில் ரஜினிக்கு எப்படி பெயர் கிடைத்ததோ அதே போல் ரகுவரனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மார்க் ஆண்டனி என்று அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது.

இதனால் ரஜினி தனக்கு ரகுவரனை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். மற்றொரு வில்லன் யார் என்றால் தற்போதும் சினிமாவை ஆட்டிப் படைக்கும் பாகுபலி சிவகாமி தேவி தான். அதாவது ரஜினியின் படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கொடூர வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார்.

இப்படி ஒரு அகம்பாவம் பிடித்த பெண்ணா என பலரும் சாபமிடும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. ரஜினி தனது திரைவாழ்க்கையில் ரகுவரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் எனக்கு பிடித்த வில்லன்கள் என கூறியுள்ளார். மேலும் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் படத்திலும் ரம்யாகிருஷ்ணன் நடிக்கயுள்ளார். ஆனால் வில்லியாக அல்ல, ரஜினிக்கு ஜோடியாக நடிக்கயுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படையப்பா படத்தில் விட்ட சபதத்தை ஜெயிலர் படத்தில் ஜெயித்துக் காட்டயுள்ளார் நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன்.