Actor Rajini: பொதுவாக பண்டிகை நாட்களில் தான் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். அந்த வகையில் இப்போது ஆயுத பூஜைக்கு விஜய்யின் லியோ படம் வெளியாகும் நிலையில் தீபாவளி ரேசுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது. ஆனால் 2024ஆம் ஆண்டு தீபாவளியை குறிவைத்து ரஜினியின் படம் ஒன்று வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 600 கோடி வசூலை எட்டியது. இந்தப் படம் எப்படியும் ஆயிரம் கோடி வசூலை தொடும் என எதிர்பார்த்த நிலையில் அதற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகிவிட்டது. மேலும் லியோ படம் ஆயிரம் கோடி வசூலை அடிக்கும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஜெயிலரில் விட்ட அந்த ஆயிரம் கோடி வசூலை கண்டிப்பாக அடுத்த படத்தில் அடித்து விட வேண்டும் என்ற ரஜினி திட்டம் போட்டு இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171 வது படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.
எப்போதுமே லோகேஷ் தனது படத்தின் அறிவிப்புடன் ரிலீஸ் தேதியையும் அறிவிப்பார். அந்த வகையில் இந்த படத்தின் பூஜை போடும்போது 2024 தீபாவளிக்கு தலைவர் 171 ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. மேலும் பிப்ரவரியில் இருந்து தொடர்ந்து 8 மாதங்களுக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு முன்னதாக ரஜினி நடித்துள்ள லால் சலாம் படம் வெளியாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த படப்பிடிப்பை முடித்தவுடன் லோகேஷ் படத்தில் உடனடியாக ரஜினி நடிக்க இருக்கிறார்.
ஆகையால் அடுத்த வருடம் ரஜினியின் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு படங்களாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 70 வயதை கடந்தும் இப்போதும் ஓய்வெடுக்காமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக படங்களில் நடித்து வருவது பாராட்டக்கூடிய விஷயம்.